மெர்சலுக்கே இப்படின்னா..! காலாவில், இதை விட பெருசா இருக்கே – பா. ரஞ்சித் விளக்கம்

0
2239
Mersal - Kaala

விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பாஜகவை கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது. அரசியல் தொடர்பான வசனங்கள் வீடியோ காட்சிகளாக தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
mersalஇதனால் மெர்சல் படத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வருக்கின்றனர்.மெர்சல்லின் பல்வேறு சர்ச்சைகளை பார்த்த காலா பட இயக்குனர் ரஞ்சித் கூறியது மெர்சல் படத்தில் வரும் வசனங்களுக்கே இப்படி என்றால் காலா படம் வந்தால்.?

படம், 2018 ஏப்ரலில் வெளியாகும் என்று இயக்குனர் ரஞ்சித் கூறியிறுக்கிறார்.இயக்குனர் ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடி கபாலி வெற்றிக்கு பிறகு கை கோர்க்கும் படம் தான் காலா. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது . இப்படத்தின் கதை முழுக்க ரஜினியின் காதபாத்திரத்தையே மையமாக கொண்டு எடுக்கப்பட்டது .நெல்லையில் இருந்து பம்பாய் செல்லும் ஒரு டா்னின் கதை தான் இது.
Kaala ரஜினி நடித்து வரும், காலா படத்திலும், அரசியல் குறித்த வசனங்கள் உள்ளன. சமீபத்தில், அரசியலுக்கு வருவது குறித்து, ரசிகர்களுடன் கலந்துரையாடிய ரஜினி, ஒவ்வொரு தரப்பிலும் கருத்து கேட்டு வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள, 2.0 மற்றும், காலா படத்தை முடித்த கையோடு, ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அதற்கு, வலு சேர்க்கும் வகையில், காலா படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.
Pa. Ranjithசமுதாயம் தொடர்பான கருத்துக்களை அழகாவும்,மக்களுக்கு புரியும் படி எளிமையான நடையில் கூறுவார் இயக்குனர் ரஞ்சித் .இதனால் காலா படம் மெர்சலை விட பெரிய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.