விரைவில் பார்ட் 2 – பல ஆண்டுகள் கழித்து ஒன்றாக சந்தித்துக்கொண்ட மெட்டி ஒலி சீரியல் நடிகைகள். தனத்துக்கு என்ன ஆச்சி? இப்படி ஆகிட்டாங்க.

0
471
- Advertisement -

மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கும் நிலையில் பல ஆண்டுகள் கழித்து மெட்டி ஒலி சீரியல் நடிகைகள் ஒன்றாக சந்தித்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. 90 காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் தான் மெட்டி ஒலி. அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

-விளம்பரம்-

2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் இந்த சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐந்து சகோதரிகளின் வாழ்க்கை கதை தான் மெட்டி ஒலி சீரியல். இந்த தொடரை இயக்கிய திருமுருகன் அவர்கள் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மெட்டி ஒலி சீரியல்:

மேலும், இந்த தொடரின் டைட்டில் சாங் அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தும் இரண்டு மூன்று முறை மறுஒளிபரப்பும் செய்துவிட்டார்கள். அப்போதும் சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக மெட்டி ஒலி சீரியல் நடிகைகள் ஒன்றாக சந்தித்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அடையாளம் தெரியாமல் மாறியுள்ள தனம் :

அதில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த காவேரி அடையாளம் தெரியாத அளவு ஒல்லியாக மாரி இருக்கிறார். இதுகுறித்து ஏற்கனவே பேசி இருந்த அவர் தனக்கு தைராய்டு வந்துவிட்டதாகவும். அதனால் மாத்திரை சாப்பிட்டு நிறைய வெயிட் போட்டதாகவும் அதனால் மாத்திரை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் உடனே எட்டு கிலோ வரை குறைந்துவிட்டேன். வெயிட் போடணும். ஆனால், எது செய்தாலும் ஏறவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மெட்டி ஒலி 2 குறித்த தகவல் :

மேலும்,மெட்டிஒலி இரண்டாம் பாகம் குறித்து இதுவரை எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.மெட்டிஒலி 2 குறித்து மெட்டிஒலி முதல் சீசனில் நடித்த சில பேர் கூறுகையில் மெட்டி ஒலி 2 சீரியல் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலரிடம் பேசி இருக்கிறார்கள். ஆனால், யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது இப்போது வரைக்கும் தெரியவில்லை. டெல்லி குமார் சாரை பொறுத்தவரை முதல் சீசனில் இறந்துவிட்ட மாதிரி காட்டிருப்பார்கள்.

கூடிய விரைவில் அப்டேட் :

அதனால் அவர் இரண்டாவது சீசனில் இருப்பாரா? என்று தெரியவில்லை. இன்னும் சில மாதங்களில் இந்த தொடர் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சினிமாவில் எப்படியோ சீரியல்களைப் பொறுத்தவரை ஹிட்டான சீரியல்கள் அடுத்த சீசன்கள் வந்தால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைப்பதில்லை என்பது தான் எதார்த்தம்.சித்தி, பாரதி கண்ணம்மா தொடர்கள் எல்லாம் முதல் சீசன் அளவிற்கு பெரிய அளவு கிடைக்கவில்லை. ஆனால், இயக்குனர் திருமுருகன் ரசிகர்களை கவரும் வகையில் ஏதாவது ஒன்று கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் மீண்டும் இந்த சீரியலில் சென்டிமென்டை கொண்டு வந்து எல்லோர் மனதையும் கவருவார். கூடிய விரைவிலே இது பற்றி தெரியவரும் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement