எந்த மதமா இருந்தாலும் சரி, உங்க குழந்தைங்கள அங்க கூட்டிட்டு போங்க – தெய்வமகள் சீரியல் அரவிந்த்.

0
425
Aravind
- Advertisement -

எந்த மதமாக இருந்தாலும் குழந்தைகளை வழிபாட்டுத் தலங்களுக்கு அனுப்புங்கள் என்று பிரபல சீரியல் நடிகர் அரவிந்த் கதரே வைத்திருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அரவிந்த் கதரே. இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மருமகள், தெய்வமகள், யாரடி நீ மோகினி போன்ற பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு
இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்திருக்கிறார். தற்போதும் இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அரவிந்த் கதரே பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இப்போது இருக்கும் காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

- Advertisement -

அரவிந்த் கதரே பேட்டி:

ஆனால், நான் எப்பவும் நினைப்பது ஒன்று தான். நமக்கு மேல ஒரு சக்தி இருக்கிறது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி கடவுளாக இருந்தாலும் சரி ஒரு சூப்பர் பவர் நம்மை காத்துக் கொண்டிருக்கின்றது. நம்பிக்கை இல்லாமல் அதை உணர முடியாது. நமக்குள்ளே நம்முடைய மனசாட்சி தான் கடவுள் என்று என்னுடைய அம்மா சொல்லி இருக்கிறார். சின்ன வயதிலிருந்தே நான் பயந்த சுபாவம் கொண்டவன்.

-விளம்பரம்-

கடவுள் நம்பிக்கை குறித்து சொன்னது:

இருட்டில் செல்வதே பயம். அப்போது அனுமான் கீர்த்தனை படிக்க சொன்னார்கள். அதை படித்ததும் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது. பின் எனக்குள் இருந்த பயம் போனது. படித்தால் பயம் வராது என்ற ஒரு நம்பிக்கை தான் நான் சொன்ன அந்த சூப்பர் பவர். அப்படித்தான் எனக்குள் பக்தி வந்தது. கடவுள் மீதான பயம் ஏற்பட்டது. என்னுடைய நண்பர் மூலம் தான் சாய்பாபா தரிசனம் செய்யும் பழக்கம் வந்தது.

அரவிந்த் கதரே அறிவுரை:

இப்போது இருக்கும் பெற்றோர்களும் நேரம் என்பது இல்லை. அவர்கள் குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். இது சரியானது இல்லை. நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களானாலும் சரி குழந்தைகளை வழிபாட்டு தளங்களுக்கு செல்வதை பழக்க வேண்டும். என்னுடைய குழந்தைகள் நான் இல்லை என்றாலும் விசேஷ நாட்களில் கோயிலுக்கு சென்று விடுவார்கள். இப்போது இருக்கும் தலைமுறையினர் மாதா பிதாவை தான் மதிக்கவில்லை.

அரவிந்த் கதரே கோரிக்கை:

அதனால் குரு, தெய்வத்தை யாவது மதிக்க வேண்டும். நான் நிறைய சர்ச்க்கு போவேன். அந்த இடமே அமைதியாக இருக்கும். கடவுளுக்கும் நமக்கும் ஆன தொடர்பு என்பது இருக்கும். அதேபோல் தர்காவில் இருக்கும் பவர் தனித்துவமானது. அது எல்லாம் உணரும்போதுதான் அந்த பவர் என்பது தெரிய வரும். வருடத்திற்கு இரண்டு முறையாவது வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லுங்கள். மனதுக்கு நிறைவாக உணர்வீர்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement