Ak61 படம் முதலில் மோகனுக்கு தான் சென்றது. அந்த படத்தின் கதை இது தான் – இயக்குனர் சொன்ன சீக்ரெட்.

0
511
Ajith
- Advertisement -

அஜித் 61 படம் குறித்து மைக் மோகன் பட இயக்குனர் விஜய் ஶ்ரீ அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 80,90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் மோகன் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். அதோடு ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்ட நடிகர். மோகன் அவர்கள் கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும்.

- Advertisement -

மோகன் படங்கள் தோல்விக்கான காரணம்:

அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், 80ஸ் காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர். தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார் மோகன். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் மோகன். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கிய நடிகர் மோகன் அவர்கள் ஒரு நடிகை அவரை பற்றி பொய்யாக சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது. அதோடு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் அவர்கள் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

மோகன் நடிக்கும் ஹரா படம்:

அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து 1999 ஆம் அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கினர். அதன் பின்னர் இறுதியாக தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் மோகன். இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ’தாதா 87’, ’பவுடர்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மோகன் நடிக்கும் படத்திற்கு ஹரா என்று பெயரிடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இயக்குனர் விஜய் ஸ்ரீ அளித்த பேட்டி:

தற்போது மோகனின் ஹரா படத்தின் சூட்டிங் மூன்றாவது செட்யூல் செல்ல உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் விஜய் ஸ்ரீ பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, மோகனை வைத்து படம் பண்ணனும் என்பது ரொம்ப வருடமாக ஆசைப்பட்டேன். ஏனென்றால், தமிழில் ஸ்டார்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்று யாருமே இல்லை. மோகன் மட்டும் தான் இன்னமும் அந்த இடத்தில் இருக்கிறார். நான் மோகனை சந்தித்த பிறகு தொடர்ந்து இரண்டு வருடமாக அவரை ஃபாலோ பண்ணி கொண்டே இருந்தேன். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த இரண்டு வருஷம் ஆகவே மோகன் சாரும் கதைகள் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

அஜித் 61 கதை முதலில் சொன்னது:

Ak61

நல்ல கதை அமையும்போது படம் பண்ணலாம் என்று இருந்தார். மேலும், அஜித் 61 படத்தின் கதையைக் கூட அந்த படத்தின் இயக்குனர் இதுக்கு முன்னாடி மோகன் சார் கிட்ட தான் சொல்லி இருக்கார். அதற்கு பிறகு தான் நான் என்னுடைய கதையை சொன்னேன். நானும் இப்படி ஒரு கதையை தான் எதிர்பார்த்தேன் என்று சொன்னார். அதுவே பாதி வெற்றி ஆக எனக்கு தோன்றியது. பின் படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார்கள். தமிழில் முதல்முறையாக இந்த காம்பினேஷன் கலக்க போகுது. இவங்க தவிர மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா, ஆதவன் என்று நிறைய பேர் படத்தில் நடிக்கிறார்கள். சென்னையிலும், கோவையிலும் சூட்டிங்க்கு போன போது தான் மோகனுக்கு இன்னமும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. குறிப்பாக பெண் ரசிகைகள் அவருக்கு அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரியவந்து. படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்று விஜய் ஸ்ரீ கூறி இருக்கிறார்.

Advertisement