விஜய் டிவியில் இன்னொரு நிஜ காதல் ஜோடி ரெடியா ? வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் பதிவு

0
1715
- Advertisement -

விஜய் டிவியில் இன்னொரு நிஜ காதல் ஜோடி இணைய இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல் நடிகர்கள் நடித்துக் கொண்டே நிஜ வாழ்க்கையில் இணைந்து விடுகிறார்கள். ஆர்யன்- ஷபானா, ரேஷ்மா மதன் இவர்களை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் இணைய இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.

-விளம்பரம்-

இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டையிட்டு தன்னுடைய மாமனாரின் வீட்டிற்கு சென்று விடுகிறார். பிறகு ஐஸ்வர்யா, கண்ணனும் மூர்த்தியிடம் சண்டை போட்டு விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள். ஆனால், இவர்கள் வாங்கி வைத்த கடன் விவகாரம் யாருக்கும் தெரியாது. அதோடு கண்ணன் வேலை செய்யும் இடத்தில் லஞ்சம் வாங்குகிறான். இன்னொரு பக்கம் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது.

சீரியலின் கதை:

கதிர் முல்லை தங்கள் குழந்தையுடன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். தனத்திற்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இதனால் இவர் மருத்துவமனைக்கு செல்ல நினைக்கிறார். தனத்திற்கு இருக்கும் பிரச்சினை சரியாகுமா? ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இணைந்து விடுவாரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கண்ணன் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்கள் சரவணன் விக்ரம்-தீபிகா. இருவருமே இந்த சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா-கண்ணன் ஜோடி:

பின் அவருடைய முகத்தில் பரு அதிகமாக இருந்தால் சீரியலை விட்டு விலகினார். தற்போது மீண்டும் அவர் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், சீரியலில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தபோது கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து பல ரில்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டார்கள். தற்போது இவர்கள் இணைந்து ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் பலர் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். ஆனால், இது குறித்து இருவர்கள் இருவருமே எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை.

நிஜத்தில் இணையும் ஐஸ்வர்யா-கண்ணன்:

இந்த நிலையில் தற்போது இருவரும் இணைய இருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியாகிறது. அதாவது சரவணன் விக்ரம் உடைய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இனி மட்டுமில்லாமல் இனிவரும் வாழ்க்கையில் நாங்கள் சேர்ந்து இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement