ரஜினியிடம் வருத்தப்பட்டு மூத்த அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வரும் ஆன கருணாநிதி பற்றி திமுக அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். இந்த புத்தகம் வெளியிடும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் திமுக அமைச்சர்கள் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்று இருந்தார்கள்.

பின் இந்த விழாவில் கலைஞர் புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் வாங்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பொதுவாகவே பள்ளியில் ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்களை கையாளுவதில் எந்த பிரச்சினையுமே கிடையாது. ஆனால், பழைய மாணவர்களை வழி நடத்துவது தான் கொஞ்சம் பிரச்சினையாக இருக்கும். அதுபோலத்தான் திமுகவில் அதிகமான அமைச்சர்கள் பழைய மாணவர்களாக உள்ளார்கள்.
விழாவில் ரஜினி சொன்னது:
அதிலும் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் தான் துரைமுருகன். அவர்களை கையாளுவதற்கு ஆட்ஸ் ஆப். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுமையும், அவருடைய உழைப்பும் தான் காரணம். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக ஸ்டாலின் அவர்கள் நடத்தி இருந்தார். வேறு யாருக்கும் அப்படி நடந்ததுமில்லை, நடக்கப் போவதுமில்லை. கலைஞருக்கு வந்த சோதனைகள் போல் வேறு யாருக்காவது வந்து இருந்தால் காணாமலே போயிருப்பார்கள்.
“பல்லு போன நடிகர்கள் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை”.. OLD STUDENT என மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்.!#Rajinikanth #DuraiMurugan #KalaignarKarunanidhi #DMK #KarunanidhiCoin #KarunanidhiCentenary #NewsTamil24x7 pic.twitter.com/T6UqU4d8PZ
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) August 25, 2024
கலைஞர் எனும் தாய் புத்தகம்:
கலைஞருடைய புகழ் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்றெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி பல விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, துரைமுருகனை சூப்பர் ஸ்டார் கிண்டல் செய்யும் விதத்தில் பேசியிருந்தது தான் தற்போது சோசியல் மீடியா தலைப்பு செய்தியாகி இருக்கிறது. மேலும், இது தொடர்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரஜினி குறித்து கேள்வி கேட்டதற்கு, சினிமாவில் பழைய நடிகர்கள் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"Old Students".. ரஜினியின் பேச்சால் திமுகவில் சலசலப்பு.! - இளையோருக்கு வழிவிட்டு வழிநடத்த வேண்டும் என ரஜினி பேச்சை மேற்கோள்காட்டும் உதயநிதி.!#DMK | #Rajinikanth | #OldStudents | #Duraimurugan | #UdhayanidhiStalin | #Minister | #PolimerNews pic.twitter.com/qiAHeyJN1C
— Polimer News (@polimernews) August 26, 2024
துரைமுருகன் பேட்டி:
நிறைய புது நடிகர்களுக்கு வாய்ப்பே இல்லை. பல்லு போனவர்கள், தலை முடி இல்லாதவர்கள், நரைத்து போனவார்கள் என்று மூத்த நடிகர்கள் நடிப்பதால் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பில்லை என்று ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார். இதை அடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், துரைமுருகன் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.
#JUSTIN துரைமுருகன் நீண்டகால நண்பர்; நட்பு தொடரும்.. - சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி#ActorRajinikanth #Duraimurugan #Minister #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/KB8iUNI1sM
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 26, 2024
மன்னிப்பு கேட்ட துரைமுருகன்:
அதற்கு ரஜினி, நானும் துரைமுருகனும் நீண்டகால நண்பர். அவர் என்ன பேசினாலும் எனக்கு கோபம் இல்லை. அவருடன் நட்பு தொடரும் என்று கூறி இருக்கிறார். இதை அடுத்து துரைமுருகன் தான் பேசியதற்கு வருத்தப்பட்டு ரஜினியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.






