தனுஷ் படக்குழுவுக்கு எதிராகப் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் – அமைச்சர் துரைமுருகன் பதில்

0
288
Dhanush
- Advertisement -

தனுஷ் படம் குறித்து அமைச்சர் துரைமுருகன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாத்தி”.

- Advertisement -

தனுஷ் திரைப்பயணம்:

இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

கேப்டன் மில்லர் படம்:

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்கு உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதோடு படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடைபெறுவதால் ராட்சத உபகரணத்தை படக்குழு பயன்படுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பி இருக்கின்றனர். இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தென்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படக்குழுவுக்கு எதிராக புகார் கொடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தனுஷ் படக்குழு மீது புகார்:

பின் கடந்த மாதம் மத்தளம் பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எழுந்த சத்தம் மற்றும் புகை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அந்த வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படபிடிப்பு நடத்தப்பட்டதாக தெரியவந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் படபிடிப்பை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். பின் மத்தளம் பாறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஆவணங்களையும் படக்குழு சமர்ப்பித்து இருக்கிறது.

அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி:

தற்போது பழையபடி மீண்டும் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. மேலும், நீர் நிலைகளை பாதிக்கும் வகையில் தனுஷ் உடைய படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தனுஷ் படம் குறித்து கூறியிருந்தது, நீர் நிலைகளை அடைத்து சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது. யார் அனுமதி வழங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணையில் தவறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement