பாஜக எதற்காக தொடங்கப்பட்ட கட்சி என்று எல்லாருக்கும் தெரியும். அம்பேத்கர், பெரியார் பேசாததை பற்றி நான் பேசவில்லை – உதயநிதி.

0
1206
- Advertisement -

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த உதயநிதி நான் அண்ணா பேசாததை ஒன்றும் பேசவில்லை அம்பேத்கர் பேசாததை நான் பேசவில்லை பெரியார் பேசாததை நான் ஏதும் பேசவில்லை. மோடி அவர் கூறியது போலவே தான் அவர் செய்து இருக்கிறார். 9 வருடங்களில் இந்தியாவை மாற்றிவிடுவேன் என்று கூறியிருந்தார். அதே போல தான் அவர் மாற்றிவிட்டார். என்று அமைச்சர் உதயநிதி சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்திபில் கூறினார்.     

-விளம்பரம்-

உதயநிதி கூறியது:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கு பெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரதம் என்ற பெயர் இருந்தது அது குறித்து பத்திரிகையாளர்கள் அமைச்சர் கேள்விகளை எழுப்பினார் அப்போது அமைச்சர் உதயநிதிக்குரிய பதில் என்னவென்றால் அவர் வரும்போது சொல்லிவிட்டு தான் வந்தார் 9 வருடங்களில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று கூறினார். அதேபோல தற்போது இந்தியா என்ற பெயரை அவர் மாற்றி உள்ளார். அவர் சொன்னதை செய்து விட்டார்.

- Advertisement -

அதன் பின் பத்திரிகையாளர்கள் உங்களையும் அமைச்சர் சேகர்பாபு பதவியை ராஜினாமா செய்யக் கோரி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் கடிதம் ஒன்றை அளித்திருந்தார் அது குறித்து உங்கள் பதில் என்ன என்று கேட்டார்கள். திமுக என்ற கட்சியை சனாதனத்தை ஒழிக்கவே உருவாக்கப்பட்ட கட்சி தான். எங்களுக்கு ஆட்சி மீதி கவலை கிடையாது. கொள்கையின் பக்கம் தான் நாங்கள் நிற்போம் என்றும் கூறினார். சனாதன எதிர்ப்பில் ஆட்சியே போனாலும் எங்களுக்கு அது பெற்று கவலை இல்லை. தற்போது என்னுடைய தலைக்கு யார் யாரோ விலை வைத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ஒரு சாமியார் 10 கோடி என்றும் இன்னொருவர் அவர் இந்த சாமியாரின் தலையை எடுத்துவந்தால்  100 கோடி என்றும் மாற்றிய மாற்றி ஏலங்களை விட்டு வருகின்றனர். தற்போது என்னை தொட்டால் அவர்களுக்கு 10 லட்சமும் ஏதோ அறிக்கைகள் பரப்பி வருகின்றது. இது அனைத்தையும் பார்த்தால் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. நான் அம்பேத்கர் பேசாததை பற்றி நான் எதுவும் பேசவில்லை பெரியார் பேசாதது பற்றி நான் ஏதும் பேசவில்லை. பேரறிஞர் அண்ணா பேசாதது நானும் பேசவில்லை. நான் உங்களிடம் கேள்வி கேட்பது என்னவென்றால் பாஜகவை விட்டு விடுங்கள் அது எதற்காக தொடங்கப்பட்ட கட்சி எதற்காக தொடங்கப்பட்ட கட்சி என்று அனைவருக்கும் தெரியும்.

-விளம்பரம்-

அவர்கள் பேசுவது எல்லாம் பொய்யாகவே இருக்கிறது அவர்களிடம் செய்திகளும் பொய்யாக தான் இருக்கிறது. அது எல்லாம் விட்டு விடுங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் கட்சியின் பெயரிலே அண்ணாவின் பெயர் இருக்கிறது அண்ணாவை விட யாரும் சனாதனத்தை பெரிதாக எதிர்க்கவில்லை. அவர்களின் கருத்து என்ன அவர்களின் நிலைப்பாடு என்ன. அதிமுக தலைவர்களை யாரையாவது சந்தித்தல் அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள். சராதானத்தில் எதிர்த்து அதிக அளவில் பேசியது அம்பேத்கர் மட்டுமே அதைவிட அதிகமாக ஏதும் பேசவில்லை. இன்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

Advertisement