அவமானத்தில் தவித்துக் கொண்டிருந்த என்னை விஜய் தான் தூக்கிவிட்டார் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஸ்ரீகாந்த் தேவா. இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியில் கூட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இவர் 2000 ஆண்டிலிருந்து தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் குத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, சுதேசி, தர்மபுரி, நெஞ்சிருக்கும் வரை, ஆழ்வார், பழனி, பூலோகம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் பாடியும் இருக்கிறார். இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா திரைப்பயணம்:
மேலும் இவர் ஸ்ரீ ஸ்டுடியோஸ் என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதனுடைய இவர் பின்னணி பாடகி பெபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர்,
சினிமாவில் யாரும் அவமானங்களை சந்திக்காமல் வர முடியாது. எனக்கு 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் தான் நான் சினிமாவில் இசையமைப்பாளராக ஒரு படத்திற்கு புக் ஆகியிருந்தேன்.
ஸ்ரீகாந்த் தேவா பேட்டி:
அது ஒரு மிகப்பெரிய ஹீரோ படம். இது குறித்து நான் என்னுடைய மனைவியிடம் சந்தோஷமாக கூறினேன். அது மட்டும் இல்லாமல் நீ வந்த ராசி தான் எனக்கு இப்படியான வாய்ப்பு கிடைத்தது என்றெல்லாம் பேசினேன். அதற்கு அவர் இல்லை உங்களுடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று சொன்னார். பின் சில நாட்களுக்கு பிறகு என்னுடைய பெயர் அந்த படத்தினுடைய போஸ்டரில் வரவில்லை. வேரு ஒரு இசையமைப்பாளரின் பெயர்தான் இருந்தது. என்ன காரணமே புரியவில்லை எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
ஸ்ரீகாந்த் தேவா சந்தித்த அவமானம்:
அதுமட்டுமில்லாமல் எனக்கு இந்த படத்திற்கான பேமண்ட் கூட பேசி முடித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். வேறு ஒரு இசையமைப்பாளர் புக் செய்து விட்டார்கள். இது எனக்கு ரொம்ப கஷ்டத்தையும் மனவலியையும் கொடுத்திருந்தது. இதை நான் என்னுடைய மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்று மறைத்தேன். இருந்தாலும், எப்படியோ என் மனைவிக்கு தெரிந்து விட்டது. அப்போது அவள், நான் வந்த நேரம் தான் என்று வருத்தப்பட்டாள். அதற்கு நான், எல்லாருக்கும் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
விஜய் குறித்து சொன்னது:
நீ அதைப் பற்றி எல்லாம் நினைத்து வருத்தப்படாதே. நமக்கு கொடுக்க வேண்டியதை கடவுள் கண்டிப்பாக கொடுப்பார் என்று சொன்னேன். நான் சொல்லி சில நாட்களிலேயே எனக்கு தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தது. அந்த கால் விஜய் செய்தது தான். அவர் என்னிடம் நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாமா என்று சொன்னார். அப்படி நாங்கள் இருவரும் சேர்ந்து செய்த படம் தான் சிவகாசி. கீழே கிடந்த என்னை தூக்கி விட்டவர் விஜய் தான். இதை நான் என் மனைவியிடம் சொன்ன போது அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு மகிழ்ந்தார் என்று கூறியிருந்தார்.