நடிகர் சிவா ரேடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர். தமிழ்ப்படம், கலகலப்பு உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்துள்ளார். 1988ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் பிறந்தவர் சிவா.சிவாவிற்கு சுத்தமாக படிப்பு வராது. இதனால் பத்தாம் வகுப்பில் கோட்டைவிட்டு விட்டார்.
அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்துகொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்து இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தை பார்த்து மிர்ச்சி எப்.எம்மில் இருந்து இவரை அழைத்து ரேடியோ ஜாக்கியாக வேலை கொடுத்துள்ளனர்.
இதையும் பாருங்க : காலை மேல் போட்டு பேசுபவர்கள் எல்லோரும் சிலுக்காகி விட முடியாது.! அதிலும் லாஸ்லியா தான் ஒர்ஸ்ட்.!
இதன் காரணமாக இந்த வேலையை பார்த்துக்கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் சிவா. 2001ல் ஷாம் நடித்து வெளிவந்த 12B என்னும் படத்தில் நடித்தார் சிவா. இது தான் இவருடைய முதல் படமாகும். அதன் பின்னர் சென்னை 28, சரோஜா, தமிழ் படம் என்று பல்வேறு படங்களில் நடித்து அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார்.
மிர்ச்சி சிவா கடந்த 2012 பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியா ஒரு மாநில பேட்மிட்டன் வீராங்கனையாவர். திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆன நிலையில் சிவாவிற்கு மற்றும் பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் சிவாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.