மாலத்தீவில் ‘மால டம் டம்’ – மிர்னாலினியின் பீச் போட்டோ ஷூட் வைரல்

0
575
- Advertisement -

தற்போது வேண்டுமானால் இன்ஸ்டாகிராம் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம் ஆனால் அதற்கு விதை டிக் டாக் போட்டது. டிக் டாக் மற்றும் டப் ஸ்மாஸ் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டீக் டாக் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல். சொல்லப்போனால் இவருக்கு பட வாய்ப்புகள் டிக் டாக் மற்றும் டப் ஸ்மாஸ் மூலம். அந்த அளவிற்கு இவரின் ரீலிஸ் சோசியல் மீடியாவில் வைரல்.

-விளம்பரம்-

நடித்த படங்கள் :

கடந்த 2019ஆம் ஆண்டில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்” என்ற படத்தில் மூலம் தான் நடிகை மிருணாளினி அறிமுகமாகினார். மிருணாளினி இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிகு வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் “சாம்பினான்” என்ற படத்தில் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

- Advertisement -

அதற்கு பிறகு இவருக்கு முன்னனி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைத்தது. சசிக்குனார், சத்யராஜ் நடித்த “எம்.ஜி.ஆர் மகன்”, இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியின் “ஜாங்கோ என்கிற பேண்டலி”, இயக்குனர் ஐப்பான் கண்னமுத்து இயக்கி சியான் விக்ரம் நடித்த “கோப்ரா” போன்ற படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து விட்டார். ஆனால் மிருணாளினி சினிமாவில் பிரபலமானது கடந்த 2021சாம் ஆண்டு வெளியான “எனிமி” என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

எனிமி படம் :

இப்படத்தை இயக்குனர் ஆனந்த சங்கர் இயக்கி புரட்சி தளபதி விஷால் மற்றும் நடிகர் ஆர்யா முன்னணி கதாபத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் மம்தா மோகன்தாஸ் , பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவில் ஹிட் கொடுக்கவில்லை. இருந்தாலும் இப்படத்தில் வரும் டம் டம் பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதற்கு நடிகை மிருணாளினி நடனம் ஒரு காரணம் என்றும் கூறலாம்.

-விளம்பரம்-

நடித்து வரும் படங்கள் :

மேலும் இந்த பாடல் ட்ரெண்டாகி சோசியல் மீடியாவில் பலரும் இந்த பாடலை வைத்து ரீலிஸ் பதிவிட்டு வந்தனர். இதனையடுத்த நடிகை மிருணாளினி சமீபத்தில் நடித்த “கோப்ரா” படமும் அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இவர்”மாமா மச்சேந்திரா” மற்றும் “ஆர்கானிக் மாமா ஹைப்ரிட் அல்லுடு” என்ற இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் நடிகை மிருணாளினி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

வைரலாகும் புகைப்படங்கள் :

பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றால் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து அவற்றினை தங்களுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவார்கள். அதே போன்றுதான் நடிகை மிருணாளினியும் தன்னுடைய சோசியல் மீடியாவில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement