‘எத்தனை பேர் குறை சொன்னாலும்’ – தேவர் மகன் படம் குறித்து மோகன் ஜி போட்ட பதிவு. மாரி செல்வராஜுக்கு பதிலடியா ?

0
2490
- Advertisement -

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் சொன்ன கருத்துக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் தற்போது தேவர் மகன் குறித்து மோகன் ஜி சொல்லி இருக்கும் கருத்து வைரலாகி வருகிறது. . தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மாமன்னன் படம்:

இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் 29ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இது தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது.

- Advertisement -

ஆடியோ லான்ச் விழா:

அதில், மாமன்னன் படக்குழு, கமலஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், சூரி, வினோத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், விழாவில் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன். கமலஹாசனின் தேவர் மகன் படம் ஜாதி பெருமையை அப்பட்டமாக பேசி இருந்தது. மாமன்னன் உருவாவதற்கும் தேவர் மகன் படம் தான் காரணம். தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படம் என்று கமலஹாசனை வம்பு இழுத்து இருக்கிறார்.

கமலஹாசனின் தேவர்மகன் படம் குறித்து சொன்னது:

இப்படி கமலஹாசனின் தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் பேசியது குறித்து கமல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜூக்கு எதிராக மீம்ஸ்களை தெரிக்க விட்டு வருகிறார்கள். அதோட மாரி செல்வராஜூக்கு ஏற்கனவே கமல் மீது தீராத பகை இருந்திருக்கிறது. அதை இந்த மாமன்னன் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் வைத்து தீர்த்து கொண்டீர்கள் என்றும், நீங்க எடுத்தா புரட்சிப்படம் மத்தவங்க எடுத்தா ஜாதிப்படமா ? என்றும் கமலின் ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மோகன் ஜி பதிவு :

அதே போல மாரி செல்வராஜின் இந்த பேச்சை தொடர்ந்து தேவர் மகன் படம் குறித்தும் அந்த படம் ஜாதிப்படமாக என்பது குறித்தும் விவாதங்கள் சமூக வலைதளத்தில் எழ துவங்கிவிட்டது. இப்படி ஒரு நிலையில் தேவர் மகன் படம் குறித்து மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே.

இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம்’ என்று பதிவிட்டுள்ளார். மோகன் ஜியின் இந்த பதிவு மாரி செல்வராஜின் கருத்திற்கு சூசகமாக பதிலடி கொடுத்து இருப்பது போலவே இருக்கிறது. மேலும், மோகன் ஜியின் இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசிகள் மத்தியில் இருந்து ஒரு புறம் ஆதரவுகளை மறுபுறம் எதிர்புகளும் எழுந்து வருகிறது.

Advertisement