எல்லாரும் இங்க வந்து பாக்கணும், இங்க மணி மண்டபம் கட்டணும் – உணர்ச்சி பொங்க பேசிய மோகன் ஜி

0
174
MohanG
- Advertisement -

ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு இயக்குனர் மோகன் ஜி வைத்திருக்கும் கோரிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும், இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

மோகன் ஜி திரைப்பயணம்:

மேலும், இயக்குனர் மோகன் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டை வைத்து தான் படத்தை இயக்கி இருந்தார். இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து மோகன் அவர்கள் செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். மோகன் ஜியின் முந்தைய திரைப்படம் போல இந்த திரைப்படமும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாகவே எடுக்க முயற்சி செய்து இருந்தார்.

-விளம்பரம்-

பகாசூரன் படம்:

இந்த படத்தில் சமூக வலைதளத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை, பாலியல் தொழிலில் பெண்கள் எப்படி சிக்குகின்றனர் போன்ற விஷயங்களை பேசி இருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை தொடர்ந்து மோகன் மீண்டும் ரிச்சர்டை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் சமூகப் பிரச்சனை, அரசியல் குறித்து கருத்துக்களை பதிவிட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

ராஜராஜ சோழன் குறித்த தகவல்:

இந்த நிலையில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு இயக்குனர் மோகன் ஜி வைத்திருக்கும் கோரிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன். இவர் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்திருந்தார். இவருடைய உண்மையான பெயர் அருள்மொழிவர்மன். இவருடைய ஆட்சிக்காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்துமே சிறப்பு பெற்றிருந்தது. இதற்கான சான்று தான் தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில்.

மோகன் ஜி வைத்த கோரிக்கை:

மேலும், அவருடைய ஆட்சியும், கட்டிடங்களையும் இன்றும் உலகளவில் மக்கள் மத்தியில் பாராட்டப் பெற்று வருகின்றது. இவருடைய சமாதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் இருக்கிறது. ஆனால், ராஜராஜ சோழனின் சமாதி பராமரிப்பில்லாமல் சிதைந்து கிடைக்கிறது. இந்நிலையில் ராஜராஜ சோழனின் நினைவிடத்திற்கு பலரும் வந்து 1038 வது வருடத்தை ஒட்டி அனைவரும் மரியாதை செலுத்தி வழிபட்டு சென்றிருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜியும் வழிபட்டு இருக்கிறார். இதனை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து மோகன், மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சோழர்களுடைய வரலாறு குறித்து நிறைய சான்றுகள் கிடைக்கும். இதை நான் தமிழக அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறுகிறார்

Advertisement