டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் படங்கள்..!ஜகா வாங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்..!

0
523
december-21

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே தயாரிப்பாளர்கள் சங்கம் பல பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தயாரிப்பாளர் தற்கொலை, நடிகர்களின் அதிக சம்பளம் என்று பல்வேறு பஞ்சாயத்து ஓடிக்கொண்டு தான் வருகிறது.


இந்நிலையில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள ,மாரி 2, ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ போன்ற பல படங்கள் வெளியாக உள்ளது.

- Advertisement -

ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியானால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கலும், வசூலிலும் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களிடம் அறிவுறித்துயுள்ளது.ஆனால், திட்டமிட்டபடி படத்தை டிசம்பரில் தான் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் ஒத்தை காலில் நின்றுள்ளார்.

இதனால், டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும், அதில் தயாரிப்பாளர் சங்கம் தலையிடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இனிமேலும், யார் டிசம்பர் 21-ம் தேதி வெளியீடு என தேதி கேட்டாலும், கொடுப்பது என ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement