படத்தில் நடிக்காத நண்பனுக்காக காதல் மன்னன் படத்தில் எம்.எஸ்.வி செய்துள்ள விஷயம். இதான் நட்பு.

0
363
- Advertisement -

காதல் மன்னன் இயக்குனர் எம் எஸ் விஸ்வநாதன் வைத்திருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் திரை உலகில் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் எம் எஸ் விஸ்வநாதன்- டி கே ராமமூர்த்தி. இவர்களுடைய குரு எஸ் எம் சுப்பையா நாயுடு. இவருடைய மறைவிற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் 1952ல் இருந்து ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இருவருமே நூற்றுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். 1965 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் தான் இருவரும் பிரிந்தார்கள். இவர்கள் இருவரும் பிரிந்ததுக்கு காரணம் எம் எஸ் வி சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இருந்தார். அது நஷ்டம் அடைந்தது. இதனால் அந்த கடனை அடைக்க தன்னை சேர்த்துக்க வேண்டாம் என்று ராமமூர்த்தி சொன்னார். அதனால்தான் இவர்கள் இருவரும் பிரிந்து இசை அமைத்தனர்.

- Advertisement -

அதற்கு பிறகு ராமமூர்த்தி 1966- 1986 வரை திரைப்படங்களில் பணியாற்றி இருந்தார். பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு எங்கிருந்தோ வந்தான் என்ற படத்தின் மூலம் தான் இருவரும் இணைந்தார்கள். மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு 1995ஆம் ஆண்டு கல்கி என்ற நாடகத்தின் மூலம் தான் எம் எஸ் விஸ்வநாதன் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

இவர் முதலில் நடிக்க தான் சினிமாவுக்கு வந்தார். ஆனால், இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்தார். இருந்தாலும் இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. குறிப்பாக 1998 ஆம் ஆண்டு வெளியான காதல் மன்னன் படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் கண்ணதாசனின் தீவிர ரசிகராக தன்னுடைய சிறப்பான நடிப்பை விஸ்வநாதன் வெளிப்படுத்தி இருந்தார். மேலும், இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அந்த படத்தினுடைய இயக்குனர், விவேக் தான் எம் எஸ் விடம் பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், நடிக்க முடியாது என்று எம் எஸ் வி மறுப்பு தெரிவித்தார். அவரை விடாமல் நடிகர் விவேக் தான், நீங்கள் நடித்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வற்புறுத்தினார். அதற்கு பிறகு தான் எம் எஸ் வி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக அவர் சம்பளமாக 10 லட்சம் ரூபாய் கேட்டார். இயக்குனர் சம்மதித்து விட்டார். ஆனால், எம் எஸ் வி 10 லட்சம் கேட்டதுக்கு காரணம், எனக்கு 5 லட்சம், ராமமூர்த்தி 5 லட்சம்.

எங்களுடைய பிராண்டை பிடிக்காதீங்க என்று சொல்லியிருந்தார். அதேபோல இயக்குனரும் செய்தார்.
இப்படி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த ராமமூர்த்தி 2013 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக இறந்தார். அவருக்கு அப்போது 91 வயது. அதற்குப் பின் விஸ்வநாதன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு சுவாச பிரச்சனை காரணமாக இறந்தார். இவர்கள் இருவருமே இவ்வுலகில் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement