மன்சூர் பிரச்சனை எரிந்துகொண்டு இருக்கும் வேலையில் அமைதிப்படை படத்தில் சத்யராஜுடன் நெருக்கமான காட்சியில் நடித்தது குறித்து கஸ்தூரி கூறிய விஷயம்.

0
547
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லை.

-விளம்பரம்-

இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான் மீது புகார்:

மேலும், இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று டிஜிபிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய நாளிலிருந்து திரை உலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

கஸ்தூரி கருத்து:

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். இதற்கு கஸ்தூரியை கஸ்தூரியின் எதிர்பார்ப்புகள் சத்யராஜுடன் கஸ்தூரி அமைதிப்படை படத்தில் நெருக்கமாக நடித்த காட்சிகளை குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார்கள். இதற்கு அமைதிப்படை காட்சி குறித்து கஸ்தூரி கூறியிருப்பது, சத்யராஜுடன் அமைதிப் படத்தில் நடித்ததை மறக்க முடியாது.

-விளம்பரம்-

அமைதிப்படை குறித்த சர்ச்சை:

அவரது அற்புதமான நடிப்பு திறமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அவருடன் அறிவுப்பூர்மான, நகைச்சுவை நிறைந்த உரையாடல்கள் ஷூட்டிங்கின்போது இருந்தது. அந்த படத்தில் நான் இடம்பெற்ற அனைத்து காட்சிகளையும் பெருமையாக கருதுகிறேன் என்று கூறி இருக்கிறார். இதற்கு நெட்டிசன் ஒருவர் கஸ்தூரியின் டீவ்ட்டை விமர்சித்து பேசி இருக்கிறார். அதற்கு கஸ்தூரி கொடுத்த பதில், சத்யராஜ் ஒரு ஜென்டில்மேன்.

கஸ்தூரி கொடுத்த டீவ்ட்:

படப்பிடிப்பு தளத்தில் என்னை அவர் பத்திரமாக பார்த்துக் கொண்டார். எந்த நிலையிலும் நான் அசவுகரியமாக உணரவில்லை. ஷூட்டிங்கின்போது என் அம்மாவும் உடன் இருந்தார். அவர் என்னிடம் சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோரின் பணிகளை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது என்றார். ஷூட்டிங்கில் நடந்தது எல்லாம் முழுவதும் தொழில் சார்ந்ததுதான். எந்த இடத்திலும் தேவையற்ற செயலை யாரும் செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement