முல்லை கதாபாத்திரம் மீண்டும் மாற்றமா ? இனி கவியாவிற்கு பதில் இந்த நடிகை தானா ?

0
747
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை.

-விளம்பரம்-
Tamil Cinema Latest News in Tamilfont | தமிழ் சினிமா செய்திகள் | Galatta.com

இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதோடு இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் – முல்லை கதாபாத்திரம் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இதில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார்.

- Advertisement -

முல்லையாக நடித்து வரும் காவ்யா:

சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா இறந்து ஓராண்டு நிறைவடைந்து இருக்கிறது. மேலும், பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து இருந்தார். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார்.

Pandian Stores Kavya Arivumani Latest Photoshoot In Modern Dress

காவ்யா நடிக்கும் படங்கள்:

அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. சில காரணங்களால் பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டேன் என்று காவ்யா தெரிவித்திருந்தார். அதே போல தற்போது இவருக்கு சில பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. சக்திவேல் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க காவ்யா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் பரத் மற்றும் வாணி போஜன் கமிட்டாகி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் காவ்யா வெப் சிரிஸிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மீண்டும் முல்லை மாற்றமா:

இப்படி ஒரு நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு இருந்தது. அதுவும் முல்லை கதாபாத்திரத்தில் அபிநயா என்பவர் நடிக்க இருப்பதாகவும் அதற்கான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தற்போது ஒரு மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அபிநயா முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை என்பது தான் உண்மை.

என்ட்ரி கொடுக்கும் புது நடிகை:

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து காவ்யா விலகவில்லை. மேலும், அபிநயா என்பவர் முல்லையின் தோழி என்ற கதாபாத்திரத்தில் தான் புதிதாக நடிக்க வந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவின் வெளியாகியுள்ளது. இதனால் சில மாதங்களாகவே ரசிகர்கள் முல்லை கதாபாத்திரம் மீண்டும் மாற இருக்கிறது என்று பல குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இதன் மூலம் ஒரு தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement