உறுதியானது..! அண்ணனுடன் வெளியேறிய மும்தாஜ்..! வைரலாகும் புகைப்படம்.!

0
1249
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு மும்தாஜ் வெளியேற்றபட்டார் என்று ஏற்கனவே நமது பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

-விளம்பரம்-

Mumtaj

- Advertisement -

இந்நிலையில் மும்தாஜ் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதற்கான ஆதாரமும் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சமீபத்தில் மும்தாஜ் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என்று ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் மும்தாஜின் சகோதரரும் மும்தாஜுடன் இருக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தின் மூலம் மும்தாஜ் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகியுள்ளார் என்று நூறு சதவீதம் உறுதியாகியுள்ளது. இந்த வாரம் நடந்து வந்த வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி வருவதாகவும், இதில் ஐஸ்வர்யாவைவிட மும்தாஜிற்கு குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற்றபட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக இருந்தாலும்,இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றபட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மும்தாஜ் வெளியேறினார் என்ற அறிவிப்பை கமல் அவர்கள் அரங்கத்தில் அறிவித்ததும் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

Advertisement