1995-இல் எடுத்த படம்..! சர்ச்சையால் 23 ஆண்டு தடை..! இப்போது வெளியாகவுள்ளது..! அப்படி என்ன சென்சார் .?

0
1237

தமிழ் சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் சுமிதா. 1980ஆம் ஆண்டு “வண்டிசக்கரம் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு கதாநாயகிகள் வந்தாலும் இவரது மார்க்கெட் மட்டும் என்றும் குறையாமல் இருந்தது.

silksmitha

நடிகை சில்க் சுமிதா முதன் முதலில் “இணைய தேடி” என்று மலையாள படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். இவரை தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் திருப்பதி ராஜன். என்பவர் தான் அறிமுகம் செய்தார்.

முதன் முதலில் நடிகை சில்க் சுமிதாவை, இயக்குனர் திருப்பதி ராஜன் என்பவர் “வீணையும் நாதமும்” என்ற படத்தில் தான் அறிமுகம் செய்துள்ளார், அந்த படம் வெளியாகாமல் போனது. அதே போல நடிகை சில்க் சுமிதாவை வைத்து 1995 ஆம் ஆண்டு “ராக தாளங்கள்” எடுத்துள்ளார் இயக்குனர் திருப்பதி ராஜன். ஆனால், அந்த படம் வெளியாகாமல் போக தற்போது அந்த படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்.

silk

இதுகுறித்து இயக்குனர் திருப்பதி ராஜன் கூறுகையில், ‘1979-ம் ஆண்டு சில்க்கை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சில்க் சுமிதா என்று பெயர் சூட்டினேன். நான் சில்க் சுமிதாவை வைத்து 1995 ஆம் ஆண்டு “ராகதாளங்கள்” என்ற படத்தை இயக்கினேன்

அவர் நடித்த கடைசி படம் இதுதான். 1995 ஆம் ஆண்டிலேயே இந்த படத்தில் சாதி பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்சினை ஆகிவிட்டது.இதனால் இந்த படத்தை வெளியிட முடியவில்லை. ஆனால், இப்போது வெளியிடலாம் என்று செய்ய முடிவு செய்துள்ளேன் என்று இயக்குனர் திருப்பதி ராஜன் கூறியுள்ளார்.