அஜித்தின் அழைப்பிற்காக காத்திருக்கும் முருகதாஸ்..!பேட்டியில் வெளியிட்ட மாஸ் தகவல்..!

0
171

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இதுவரை தமிழில் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் இயக்கிய சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது ரஜினியை வைத்து படம் இயக்க ஏ ஆர் முருகதாஸ் திட்டம் தீட்டி வருகிறார்.

ajithmurugadoss

அஜித்தை வைத்து இவர் இயக்கிய தீனா திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது . அதே நடிகர் விஜயை வைத்து இதுவரை துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று மூன்று படங்களை இயக்கிவிட்டார் முருகதாஸ்.

ஆனால், அஜித்தை வைத்து தினா திரைப்படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இதனால் மீண்டும் அஜித்-முருகதாஸ் கூட்டணி எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இதுகுறித்து பேசுகையில், கடந்த 7 ஆண்டுகளாக ரசிகர்கள் என்னிடம் எப்போது அஜித்துடன் படம் பண்ண போகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். சொல்லப்போனால் நானும் அதனை அஜித்திடம் சொல்லியுள்ளேன்.

ரசிகர்களின் விருப்பத்திற்காவது நாங்கள் இருவரும் இணைந்து கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம். என்னிடம் அவருக்கான ஒரு மாஸ் கதை உள்ளது. அவரது அழைப்பிற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.