Home விமர்சனம்

மகளின் இறப்பிற்கும் பின் வெளியான விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
1547
Ratham
-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரத்தம். இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் பத்திரிக்கையாளராக செழியன் இருக்கிறார். இவரை அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கொலை செய்கிறார். பின் விசாரித்ததில் தன்னுடைய தலைவரைப் பற்றி தவறாக செய்தி எழுதியிருந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்த இளைஞன் கூறுகிறார். ஆனால், இந்த கொலையை அந்த இளைஞன் ஏன் செய்கிறார்? என்று தெரியவில்லை. இதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.

பின் கதாநாயகன் விஜய் ஆண்டனியை காண்பிக்கிறார்கள். ஒரு காலத்தில் உலகளவு புகழ் பெற்ற புலனாய்வு பத்திரிக்கையாளராக கதாநாயகன் விஜய் ஆண்டனி இருந்திருக்கிறார். தற்போது அவர் தன்னுடைய மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி இறந்து இருக்கிறார். இந்த குற்ற உணர்ச்சியால் தான் இவர் தீவிரமாக குடித்து குடித்து மது போதைக்கு அடிமையாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் சூழ்நிலை காரணமாக இவர் மீண்டும் தன்னுடைய பத்திரிக்கையாளர் வேலையில் இறங்குகிறார். இவர் மர்மமான முறையில் நடக்கும் கொலைகளை செய்பவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இறுதியில் இந்த கொலைகள் ஏன் நடக்கிறது? அந்த கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மிதி கதை. வழக்கம் போல் விஜய் ஆண்டனி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், அதில் சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதம் தான் சரியில்லை. கொலைகளை செய்பவர்கள் எதற்காக செய்கிறார்கள் என்பதையே படத்தில் தெளிவாக காட்டவில்லை. படத்தில் பெரும்பாலான காட்சிகள் வேறு ஒரு படத்தில் பார்த்த காட்சிகளாகவே இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நன்றாக நடித்திருந்தாலும் அவர்களுடைய கதாபாத்திரங்கள் பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை. ஆக மொத்தம் டைட்டிலில் தான் ரத்தம் இருக்கிறதே தவிர படத்தில் ஒன்றுமே இல்லை.

நிறை:

கதைக்களம் நன்றாக இருக்கிறது

சமூகப் பிரச்சனை கதை

முதல் ஆரம்பம் ஓகே

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

குறை;

கதையை கொண்டு சென்ற விதம் சரியில்லை

பின்னணி இசை ஒர்க் அவுட் ஆகவில்லை

கிளைமாக்ஸ் நன்றாக இல்லை

சமூகப் பிரச்சனையை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் ரத்தம்- ஓடவில்லை

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news