ரொம்ப கனமா இருக்குது – பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நன்றி தெரிவித்து முத்துக்குமரன் பதிவிட்ட வீடியோ

0
131
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு நன்றி தெரிவித்து முத்துக்குமரன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருந்தது. பின் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து விட்டால் அந்த பணத்துடனே அவர்கள் நிகழ்ச்சியில் மீண்டும் தொடரலாம். அப்படி இல்லாதவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில் இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார்.

டைட்டில் வின்னர்:

இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நேற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

முத்துக்குமரன் வீடியோ:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முத்துக்குமரன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘நன்றி மறப்பது நன்றன்று’ இந்த காணொளி கனத்திற்காக இல்ல. எல்லோரும் சேர்ந்து இதை என் கையில் கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப கனமாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது உள்ளே வந்த நண்பர்கள், உங்களுக்கு வெளியே வரவேற்பு நிறைய இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஆனால், அப்போதெல்லாம் ஒன்னும் தெரியவில்லை. வந்து பார்த்த பிறகு தான் அவ்வளவு அன்பு கிடைத்தது.

நன்றி தெரிவித்த முத்துக்குமரன்:

எனக்காக இவ்வளவு அன்பு என்றால் ஆச்சரியமும், பிரமித்து போய் நிக்கிறேன், பேசவே முடியவில்லை. நமக்காக சப்போர்ட் செய்தவர்களுக்கு எப்படி நன்றி சொல்லலாம் என்றெல்லாம் யோசித்தேன். பின் இந்த நிகழ்ச்சிக்குள் போகும்போது கோப்பையை கொடுத்து அதன் இடம் பேச சொன்னார்கள். அதை தான் இந்த தருணத்தில் சொல்ல விரும்புகிறேன். அதுதான் நன்றியை சொல்லும் விதத்திற்கு சரி என்று நினைக்கிறேன். இந்த மக்களின் அன்பும் அங்கீகாரமான கோப்பையை என் நேர்மையாலும் உண்மையாலும் நான் காப்பாற்றி கொள்வேன். இது என் உழைப்பின் மீது சத்தியம். என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement