இதனால் தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். மனம் திறந்த மைனா.

0
174649
myna-second-marriage
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
maina-yogewaran

கடந்த சில நாட்களுக்கு நடிகை மைனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது. மேலும், சமீபத்தில் இதனை மைனா கூட உறுதி செய்திருந்தார். நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : படத்திற்காக கட்டுமஸ்தான உடல் அமைப்பிற்கு மாறிய ஆர் கே சுரேஷ். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

நடிகை மைனா கடந்த சில நாட்களாக இவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்ன நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

நடிகை மைனாவிற்கு ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் நடிகை மைனா இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.முதல் கணவரை இழந்த மைனா பல இன்னல்களை கடந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த போது லோகேஷ்வரனின் குடும்பத்தினர் மைனாவை பெண்கேட்டு வந்துள்ளனர்.

இதையும் பாருங்க : படப்பிடிப்பின் போது பிரபுதேவா டாடூவை நயன் இப்படி தான் மறைத்தார். பிரபல நடிகர் சொன்ன ரகசியம்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இரண்டாவது திருமணம் குறித்து சற்று யோசித்து உள்ள மைனா பின்னர் யோகேஸ்வரனின் குணநலன்களை பிடித்துப்போக அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் இவர்களது நட்பில் நல்ல புரிதல் ஏற்பட இப்படிப்பட்டவரை இழக்கக் கூடாது என்று எண்ணினாராம் மைனா. பின்னர் யோகேஸ்வரனின் பெற்றோர்கள் நந்தினியிடம் மனம் விட்டு பேச இருவீட்டாரின் விருப்பத்துடன் தங்களது நட்பு காதலாக மாறியது என்று கூறியிருக்கிறார் நடிகை மீனா.

Advertisement