விஜய்யின் லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து மிஸ்கின் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, படத்தில் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
லியோ படம்:
இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலிகான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
படம் குறித்த தகவல்:
மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது.. இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இந்த நா ரெடி பாடல் தான் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இப்படி நாளுக்கு நாள் லியோ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் லியோ படம் குறித்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்காத என்று ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிஷ்கின் அளித்திருக்கும் பேட்டி:
இந்நிலையில் லியோ படத்தின் கிளைமாக்ஸ் குறித்து மிஷ்கின் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, லியோ படத்தில் மிஸ்கின் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், கிளைமாக்ஸ் காட்சியில் நானும் விஜயும் சண்டையிடுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது அவர் என்னை அடிப்பதற்கு தயங்கினார். நான் அடிங்க என்று சொன்னேன். உடனே விஜய், நான் அண்ணனை அடிக்க மாட்டேன் என்று என்று கூறினார்.
லோகேஷ்க்கு ஏற்பட்ட அதிருப்தி:
இதனைத்தொடர்ந்து லோகேஷ் எப்படியோ வேறு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தார். ஆனால், நான் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீங்கள் என்னை அடியுங்கள் என்று சொன்னேன். எப்படியோ அவரை சம்மதித்து அந்த காட்சியில் நடிக்க வைத்தோம் என்று கூறியிருந்தார். இதன் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் மிஸ்கின் நடிக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதோடு மிக ரகசியமாக நடந்து வரும் லியோ படம் குறித்து மிஸ்கின் போட்டு உடைத்திருப்பது இயக்குனர் லோகேஷ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இது குறித்து சொந்த செலவிலேயே லோகேஷ் சூனியம் வைத்திருக்கிறார். மிஸ்கின் வாய்க்கு ஒரு பெரிய பூட்டை போடுங்கள் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.