ஆறு மாதங்கள் ஒரு ரூபாய் கூட வாங்காமல் எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்தார் – தனது training வீடியோவை வெளியிட்ட ஷிவாங்கி.

0
1813
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகள் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாலம் இருந்து வருகிறது. கடந்த மூன்று சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனின் பைனலில் மைம் கோபி, விசித்ரா, , கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மைம் கோபிக்கு முதல் இடமும் ஸ்ருஷ்டிக்கு இரண்டாம் இடமும் விசித்ராவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது. மேலும், ஷிவாங்கிக்கு 4ஆம் இடம் தான் கிடைத்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சமையல் கலை நிபுனரிடம் பயிற்ச்சி எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ஷிவாங்கி. மேலும், அந்த பதிவில் ‘ஏழு மாதங்கள் இந்த பயிற்சியில் தான் ஈடுபட்டதாகவும் தன்னை தயார் செய்த செப் சரவணன் அவர்களுக்கு மிகவும் நன்றி எனவும், அவர் தனக்கு பொறுமையாக அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததோடு அதற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும். அதிகாலை 4 மணி வரை எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ஷிவாங்கியை விட நன்றாக சமைத்த பலர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஆனாலும், விஜய் டிவியின் பெவரிசத்தால் தான் ஷிவாங்கி பைனல் வரை வந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தது. தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பதில் அளித்த ஷிவாங்கி ‘இந்த சீசன் துவங்கியதிலிருந்து நான் எப்படி சமைக்கிறேன் என ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன்.

நான் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எல்லோரும் அப்படித்தான்.எங்களின் பெஸ்ட்டை வெளிக்கொண்டுவர நிறைய தியாககங்கள் செய்கிறோம். கோமாளிகளும் அவர்களது கெட்டப்பிற்காக நிறைய பயிற்சி செய்கிறார்கள். உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி. நல்ல நாளாக இருந்து என் கடின உழைப்பு கைகொடுத்தால் நான் செய்யும் உணவு சிறப்பாக வரும்.

-விளம்பரம்-

அப்படி இல்லையென்றால் அது எனக்கான நாள் இல்லை. நான் புதிதாக கற்றுக்கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே வந்தேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதே போல இந்த சீசனின் பைனலில் பேசிய ஷிவாங்கி’ ‘எல்லாமே தெரிந்த பாட்டுதான் ஆனால் அந்த நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகிவிட்டேன். ஆனால் தெரியாத சமையலை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் தான்.

இது என்னுடைய கடைசி சீசன். ஆனால், கண்டிப்பாக அடுத்த சீசனில் கெஸ்ட் ஆக வருவேன். என்னை வளர்த்துவிட்ட இந்த செட்டிற்குள் கோமாளிக்கும் நன்றி, நானும் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பின்னால்தான் எல்லாமே எனக்கு கிடைத்தது தற்போது இந்த செட்டில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு நான் வெளியில் செல்கிறேன்’ என்று உருக்கமுடன் பேசி இருந்தார்.

Advertisement