நாச்சியார் திரை விமர்சனம் !

0
5345
naachiyaar-movie review

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி பிரகாஷ், இவானா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடிக்க இன்று வெளிவந்த படம் நாச்சியார்.தனது வழக்கமான பாணியை சற்று ஓரந்தள்ளிவிட்டு கமர்சியல் பாதைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலா.

naachiyaar-poster

பழவியபாரி ஜி.வி பிரகாஷ் ஒரு சென்னை லோக்கல் இளைஞன். இவரது மனைவி இவானா. தன் மனைவி மீது ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ வன்மத்தை நிகழ்த்தி கிரிமினல் ஆகிவிடுகிறார் ஜி.வி. இந்த குற்றவாளி ஜி.வியை பிடிக்க மிடுக்கான நேர்மையான, கருணை உள்ளம் கொண்ட ஒரு போலீசாக வருகிறார் ஜோதிகா. ஜீ.வியை பிடித்தாரா? அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? கிளைமாக்ஸ் காட்சியில் என்ன ஆகிறது? என்பதுதான் கதை சுருக்கம்.

முதல் பாதியில் காதலும் கையுமாக இருக்கும் ஜி.வி இரண்டாவது பாதியில் ஜோதிகாவால் தேடப்படும் குற்றவாளி ஆகிறார். ஜோதிகா வரும் ஒவ்வொரு சீனும் அவருக்கு கைதட்டல் வாங்கி கொடுக்கிறது. இதுவரை ஜோதிகா நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

gv prakash

புதுமுகம் என்றாலும் ஹீரோயின் இவானா இயல்பாக நடித்து அணைவைரயும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். கமர்சியலான சூப் ஃபாயாக நடித்து வந்த ஜி.வி பிரகாஷ் தற்போது தான் திரைக்குள் நுழைகிறார். அவருக்கு இனி திரை வாழ்க்கையில் இது போன்ற படங்கள் அமைந்தால் இன்னும் சிறப்பு. இசைஞானி இசைதான் படத்தின் இரண்டாவது ஹீரோ. மொத்த படத்திற்கும் வழு சேர்த்துள்ளார் இளையராஜா.

கமர்சியல் பாதைக்குள் நுழைந்துள்ள பாலா, முதல் அடியே பெரிதாக எடுத்து வைத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது. மற்றபடி கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம் இது.

jyothika

மொத்தத்தில் படத்தில் உள்ள கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது பாலாவின் அடுத்த அடி.