முதல் குழந்தையை பெற்றெடுத்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை – குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்.

0
319
reshmi
- Advertisement -

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகைக்கு முதல் குழந்தை பிறந்து இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-568-1024x576.jpg

மேலும், இந்த தொடர் நன்றாக தான் சென்றது. பின் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் விலகினார்கள். இதனால் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு வேறொரு கதை களத்தில் அதே பெயரில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்தில்குமார் அவர்கள் மாயன், மாறன் என்ற இரு வேடத்தில் நடிக்கிறார். இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

- Advertisement -

நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல்:

இந்த தொடர் ஒளிபரப்பானதிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் முதலில் மகா கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார். பின் திடீர் என்று ரக்ஷிதா சீரியலில் இருந்து விலகி விட்டார். இது குறித்து அவர் விளக்கமும் கொடுத்து இருந்தார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-569.jpg

ராஷ்மி நடித்த சீரியல்:

அதேபோல் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் மகா ரோலில் அரண்மனை கிளி சீரியலில் நடித்த நடிகை மோனிஷா நடித்து வருகிறார்.தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ராஷ்மி.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-570.jpg

ராஷ்மியின் திருமணம்:

நடிகை ராஷ்மிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி ஜெயராஜ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.பின் இருவருக்கும் பிப்ரவரி 2021 ஆண்டு இருவருக்கும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் முடிந்தது. திருமணத்தின்போது இவர்கள் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். மேலும், ராஷ்மி திருமணத்துக்கு பிறகு விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் பிறந்த குழந்தை :

இவர் ராஜபார்வை என்ற தொடரில் நடித்து அசத்தி இருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. அதற்கு பின் ராஷ்மி எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் கர்ப்பமாக இருந்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தான் இவருக்கு வளைகாப்பு கூட நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.

Advertisement