நாம் தமிழர் கட்சி தலைவரும் நடிகருமான சீமானின் தந்தை சொந்த ஊரில் மரணம்.

0
1640
seeman
- Advertisement -

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் தந்தை காலமாகி இருக்கிறார். சீமான் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்து விட்டார். தற்போது சீமான் அவர்கள் முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

சீமானின் தந்தை செந்தமிழன் இன்று (13/05/2021) பிற்பகல் காலமானார்.  சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், அரணையூரில் உள்ள வீட்டில் அவரது தந்தை, தாய் வசித்து வந்த நிலையில், தந்தை செந்தமிழன் இன்று (13/05/2021) பிற்பகல் காலமானார். இந்த தகவலை நாம் தமிழர் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இருப்பினும் 90 சதவீத இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில்இருந்தது . நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இதையும் பாருங்க : இங்க அவன் அவனுக்கு என்ன பிரச்சன போது நீ பிரியாணி ருசி பத்தி பேசிட்டு இருக்க – ரைசாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

- Advertisement -

என்னதான் நாம் தமிழர் கட்சி பின்னிலை வகித்து வந்தாலும் முந்தைய தேர்தல்களுக்கும் தற்போதைய தேர்தல்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கனிச்சாக உயர்ந்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நாம் தமிழர் கட்சி 2010ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2011 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சி போட்டியிடவில்லை முதன்முதலாக கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களம் கண்டது. அந்த தேர்தலில் நான்காவது அணியாக களம் கண்டது இந்த கட்சி.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.07% வாக்கு சதவீதத்தை பெற்றது. 2016 தேர்தலுக்கு பிறகு நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கி வருகிறது நாம் தமிழர் கட்சி. 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 16,47,185 வாக்குகளுடன் 3.89 சதவீத வாக்குகளை பெற்றது. 2019-இல் நடந்த 22  சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement