நாதஸ்வரம் சீரியல் ஸ்ருதியின் கணவர் திடீர் மரணம் – முதல் திருமண நாளை கொண்டாடிய சில மாதத்தில் இப்படி ஒரு சோகம்.

0
2488
Sruthi
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரைப் பிரபலங்கள் பலருக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா – ஆர்யன், மதன் – ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் கடந்த ஆண்டு திடீர் திருமணத்தை முடித்தார் சின்னத்திரை நடிகை ஸ்ருதி.

-விளம்பரம்-

இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த தொடருக்குப் பின்னர் சுருதி பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்து ஆண்டு திருமணம் :

இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிய பாரதி கண்ணம்மா தொடரில் கூட சுருதி நடித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்ருதிக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் பூச்சூடல் விழா நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அரவிந்த் குறித்த விவரம் :

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி ஸ்ருதி -அரவிந்தின் திருமணம் நடைபெற்றது. ஸ்ருதி திருமணம் செய்து கொண்ட அரவிந்த் உடற்பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும், இவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுருதி ‘ ‘பலரும் எங்களுடையது காதல் திருமணம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், எங்களுடைய பக்கா அரேஞ்ச் மேரேஜ்.இருவீட்டார் சம்மத்துடன் நடைபெற்றது.

-விளம்பரம்-

கணவர் குறித்து சுருதி :

கல்யாணத்துக்கு முன் அரவிந்த் சர்ப்ரைஸாக என் கண்ணை அவர் கையில் டாட்டூவாக குத்தி வந்திருந்தார். அதுதான் அவருடைய முதல் டாட்டூ அதை பார்த்ததும் என்னை அறியாமலேயே கண் கலங்கிவிட்டது. கல்யாணத்திற்கு பின்னர் தினம் தினம் அதிகமான காதல், பரிசு என்று வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி இருந்தார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி பிசினஸில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் ஸ்ருதி.

மாரடைப்பால் மரணம் :

கடந்த மே 27 ஆம் தேதி தான் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்நிலையில் இன்று அரவிந்த் மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கிறார். பொதுவாக பாடி பில்டர்கள் என்றாலே தங்கள் உடல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாக தான் இருப்பார்கள். அந்த வகையில் மிஸ் தமிழ்நாடு பட்டம் எல்லாம் வென்ற அரவிந்த் தன்னுடைய உடல் மீது மிகுந்த அக்கறை கொண்டு வந்தார். அப்படி இருந்தும் அவர் மரடைப்பால் மரணித்துள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தை மட்டுமல்லாது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

Advertisement