சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு முன்னாள் நடித்தது இந்த சூப்பர் ஸ்டார் ஜோடி நடிகை தானாம்.

0
311
ramyakrishnan-1
- Advertisement -

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் ஒரு உதவி தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் தியாகராஜன் பணியாற்றியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம், நவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் மிஸ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு பிஎஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் பல நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

அதோடு இந்த படம் நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட கருவாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காகவே இவருக்கு கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. மேலும், இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன் விலைமாதுவாக நடித்து இருந்தார். இவருடைய நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ரம்யா கிருஷ்னன் திரை பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரம்யா கிருஷ்னன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விலைமாதுவாக நடித்து இருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு அடி தூள். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நதியா தான் முதலில் நடிக்க இருந்தது. நதியா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பிற்காக சில நாட்கள் வந்து நடித்துக் கொடுத்து இருந்தார்.

சூப்பர் டிலக்சில் ரம்யா கிருஷ்னன்:

ஆனால்,என்ன காரணம் என்று தெரியவில்லை சில நாட்கள் கழித்து நதியா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்ற செய்தி வருகிறது. அதற்குப் பிறகுதான் ரம்யா கிருஷ்ணனிடம் இந்த கதாபாத்திரத்தைப் பற்றி பேசி ஒப்பந்தம் வாங்கப்பட்டது. அதேபோல் ரம்யா கிருஷ்ணனும் பெருந்தன்மையாக இந்த படத்தில் எந்த ஒரு தடையும் விதிக்காமல் நடித்து கொடுத்திருந்தார். இதை இந்த படத்தின் இயக்குனர் தியாகராஜன் அவர்களே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நதியா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

நதியா திரை பயணம்:

பின் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அப்படித்தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க நதியாவிற்கு வாய்ப்பு வந்தது. சில நாட்களிலேயே எந்த காரணமும் சொல்லாமல் படத்திலிருந்து நதியா விலகி விட்டார் என்ற தகவல் மட்டும் வெளியானது.

நதியா-சூப்பர் டீலக்ஸ் படம்:

ஆனால், இவர் ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் நதியா பாசிட்டிவ் கதாபாத்திரங்களில், அதுவும் குடும்பப்பாங்கான கதைகளை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இந்த விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா? என்று நினைத்து ஒதுங்கி இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஓருவேளை ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் நதியா நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement