மைனா, நாடோடிகள் படத்தில் குத்தாட்டம் போட்ட இவரை மறக்க முடியுமா ? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படங்கள்.

0
4498
- Advertisement -

தமிழ் சினிமாவையும் குத்தாட்டத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது 90ஸ் காலகட்டம் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பல நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என வரிசையாக ஒவ்வோரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு குத்தாட்ட நடிகைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். 

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு என்று ஒரு சில டான்சர்கள் இருந்தார்கள் ஆனால், காலப்போக்கில் அந்த பாடலுக்கு முன்னணி நடிகைகளே ஆடத் தொடங்கி, அதற்கு கோடிகளில் சம்பளம் பெற்று வருகிறார்கள். அவ்வளவு ஏன் கேஜிஎப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக நடிகை தமன்னா கோடிகளில் சம்பளம் பெற்றார் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

- Advertisement -

நடிகைகளே இப்படி ஐட்டம் பாடலுக்கு நடனமாட தொடங்கிவிட்டதால் ஐட்டம் பாடலுக்கு என்று ஆடிவந்த நடன கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் இப்படி ஒரு நிலையிலும் ஒரு சில ஐட்டம் டான்ஸர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான் அந்த வகையில் நாகலட்சுமியும் ஒருவர் மைனா படத்தில் இடம்பெற்ற சிங்கினி சிங்கினி பாடலுக்கு பேருந்தில் ஆட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இதுவரை புடவையில் குத்தாட்டம் போட்ட நாகலட்சுமி நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்னான கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பணிகள் எப்போதே நிறைவடைந்த நிலையில் இந்த படம் வெளியானதா இல்லையா என்பது கூட தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement