மோடிய யாருன்னு நெனச்சீங்க,மாலத்தீவு பயணத்தை ரத்து செய்கின்றேன் – அதிரடியாக அறிவித்த நாகர்ஜுனா

0
330
- Advertisement -

மாலத்தீவுக்கு செல்லும் திட்டத்தை நடிகர் நாகார்ஜுனா ரத்து செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நாகார்ஜுனா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு இந்தியா முழுவதும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேபோல் சில ஆண்டுகளாக இவர் தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தான் தெலுங்கு பிக் பாஸ் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இருந்தது. இன்னொரு பக்கம் இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது நாகர்ஜுனா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நா சாமி ரங்கா.

- Advertisement -

மாலத்தீவு விடுமுறை கேன்சல்:

மேலும், இந்த படத்திற்குப் பிறகு நாகார்ஜுனா அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து விடுமுறைக்காக மாலத்தீவு செல்ல திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பான தகவலும் வெளியாகியிருந்தது. இன்னொரு பக்கம் மாலத்தீவு- லட்சத்தீவு இடையே பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாகர்ஜுனா அவர்கள் மாலத்தீவு செல்லும் டிக்கெட்டுகளை எல்லாம் ரத்து செய்து இருக்கிறார். இதற்கு பதிலாக அவர் தன்னுடைய குடும்பத்துடன் பங்காரம் தீவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

நாகார்ஜுனா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் மற்றும் பாடலாசிரியர் எம் எம் கீரவாணியுடன் நாகார்ஜுனா உரையாடி இருந்தார். அப்போது நாகார்ஜுனா பேட்டியில், ஜனவரி 17ஆம் தேதி தான் மாலத்தீவு செல்ல இருந்தது. தெலுங்கு பிக் பாஸ் மற்றும் நா சாமி ரங்காபோன்ற நிகழ்ச்சிகளுக்காக நான் 75 நாட்களாக இடைவெளி இல்லாமல் உழைத்திருந்தேன். அதனால் தான் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்ல முடிவெடுத்தேன்.

-விளம்பரம்-

மாலத்தீவு டிக்கெட் ரத்து செய்த காரணம்:

. ஆனால், இப்போது என்னுடைய டிக்கெட்டை ரத்து செய்து விட்டேன். அடுத்த வாரம் லட்சத்தீவு செல்ல இருக்கிறேன். பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நான் அதை கேன்சல் செய்யவில்லை. அங்கு செல்வது சரியாக இருக்காது என்று எண்ணி தான் கேன்சல் செய்தேன். நம்முடைய பிரதமரை அவர்கள் தவறாக பேசி உள்ளார்கள். அது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவர் தான் எங்கள் பிரதமர்.

பிரதமர் குறித்து சொன்னது:

அவர் 1.5 மில்லியன் மக்களை வழி நடத்துகிறார். அவர் 1.5 பில்லியன் மக்களுக்கு தலைவர் அவரைப் பற்றி பேசியவர்கள் பின்விளைவுகளை கண்டிப்பாக எதிர்கொள்வார்கள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது. லட்சத்தீவில் உள்ள பிரபலமான பங்காரம் தீவு இயற்கை அழகு நிறைந்திருக்கிறது. நீங்களும் அங்கு செல்ல திட்டமிடுங்கள் என்று எம் எம் கீரவாணி இடம் பேசி இருக்கிறார்.

Advertisement