நண்பன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.! பலநாள் ரகசியம் வெளிவந்தது.!

0
438
Nanban

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான “நண்பன்” படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஹிந்தியில் சல்மான் கான் நடித்த “3 இடியட்” படத்தின் ரீ-மேக் படமாக இருபத்திலும் தமிழ் ரசிகர்ககுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை அமைத்து இந்த படத்தை அழகாக கொடுத்திருந்தார் இயக்குனர் ஷங்கர்.

Nanban

இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் சத்யராஜின் “வைரஸ்” கதாபாத்திரத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகம் பதிந்தது சத்யனின் “சைலன்சர்”. இந்த கதாபாத்திரம் நடிகர் சத்யனுக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஆனால், முதன் முதலில் “சைலன்சர் ” கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது சத்யன் இல்லை. பிரபல டிவி தொகுப்பாளர் தான் நடிக்கவிருந்தார்.

அது வேறு யாருமில்லை பிரபல SS Music தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய “VJ Craig” தான். இவர் தான் சத்யன் நடித்த “சைலன்சர் ” கதாபத்திரத்தில் நடிக்கவிருந்தராம் ஆனால், சில பல காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்யுள்ளது. ஒரு வேளை கிறேக் இந்த கதாபத்திரத்தில் நடித்துருந்தால் அது அவருக்கு திரையுலகில் ஒரு என்ட்ரியாக அமைந்திருக்கும்.

Craig

VJ Craig

vj-craig

எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த கிறேக் அதே தொலைக்காட்சியில் தொகுபலினியாக பணியாற்றி வந்த பூஜாவை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது கிறேக் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.