நடிகர் சல்மான் கருத்துக்கு நானி பதிலடி கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற சில படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்து இருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளியாகி இருந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருந்தார். இந்த படத்தில் நானி உடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து நானி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
ஹிட் 3:
அந்த வகையில் தற்போது நான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹிட்: தேர்ட் கேஸ் (HIT: Third Case). இந்த படத்தை சைலேஷ் கொலனு என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை, மும்பை, ஹைதராபாத், கொச்சி என்று பல பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் தொடர்பாக ஸ்ரீநிதி, நானியும் சேர்ந்து பல பேட்டிகளில் சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

படத்தின் ப்ரோமோஷன்:
இப்படி இருக்கும் நிலையில் ப்ரமோசனின் போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறிய கருத்துக்கு எதிராக நானி பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சிக்கந்தர் படம் ப்ரொமோஷனின் போது சல்மான் கான், என்னுடைய படங்கள் தென்னிந்தியாவில் வெளியிடப்படும் போது பெரிதாக வரவேற்பு கிடைப்பதில்லை. தென்னிந்திய நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் கொடுக்கிறார்கள். ரஜினிகாந்த் சார், சிரஞ்சீவி சார், சூர்யா, ராம் சரண் போன்ற நடிகர்களினுடைய படங்களை பார்க்க ஓடுகிறார்கள். ஆனால், எங்களுடைய படங்களை பார்க்க யாருமே போவதில்லை என்றெல்லாம் கூறி இருந்தார்.

நானி பேட்டி:
இதற்கு பேட்டியில் நானி, இந்தி ஒரிஜினல். அதற்குப் பின்னர்தான் தென்னிந்திய சினிமா வந்தது. தென்னிந்திய சினிமாவுக்கு இப்போது கிடைக்கும் அன்பு சமீபத்தில் கிடைத்தது தான். ஆனால், தென்னிந்தியாவில் பல சதாப்தங்களாக பாலிவுட் சினிமா இருக்கிறது. அங்குள்ள யாரிடம் ஆவது உங்களுக்கு பிடித்த இந்தி படம் என்று கேட்டாலே அவர்களுக்கு அமிதாப்பச்சன் உடைய குழந்தைப் பருவ நினைவுகள் தான் வரும். பாலிவுட் நிறைய படங்களை பற்றி சொல்வார்கள். நாங்கள் எப்போதுமே இந்தி படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம்.

சல்மான் பற்றி சொன்னது:
இப்போது எல்லோருமே தென்னிந்திய சினிமாவை ரசிக்கிறார்கள். ஆனால், இந்தி சினிமா எப்போதுமே நாடு முழுவதும் வரவேற்கப்பட்டு தான் இருக்கிறது. சமீபத்தில் சல்மான்கான் அவர்கள் தென்னிந்தியாவில் பாலிவுட் படங்கள் வரவேற்கப்படவில்லை என்று சொல்கிறார். வெற்றி பெறாமல் அவர் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார்? நிச்சயமாக 100% தென்னிந்தியாவிலும் பாலிவுட் படங்கள் கொண்டாடப்படுகிறது. நாங்கள் அனைவரையும் நேசிக்கிறோம். சல்மான்கானின் பல படங்களை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவருடைய பல பாடல்களை நாங்கள் எங்கள் திருமணங்களில் ஒழிக்க விட்டு கேட்டிருக்கிறோம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.






