விஜய் 63 யில் நடிக்க போகிறேன்.! நாஞ்சில் சம்பத்தின் அதிரடி பதில்.!

0
672
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவதாக முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி.

-விளம்பரம்-
Vijay-63

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நடிகர்கள் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல அரசியல் பிரபலம் நாஞ்சில் சம்பத் இணையவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாஞ்சில் சம்பத் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள ‘எல் கே ஜி ‘ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்து குறித்து நாஞ்சில் சம்பத் பேசுகையில், இந்த படத்தின் மூலம் நான் நடிகராக விட்டேன்.

-விளம்பரம்-

தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்றார். மேலும், தளபதி 63 படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement