உறுதியான நயன்-விக்னேஷ் சிவன் திருமண தேதி- எங்க நடக்குதுன்னு தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்

0
818
- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் நடைபெறும் இடம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன் காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.

-விளம்பரம்-
Did Vigensh Shivan Nayanthara Married | விக்னேஷ் சிவன் நயன்

மேலும், நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் private ஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார். பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும் வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள்.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல்:

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Vignesh Shivan About His Mariage With Nayanthara

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

அதேபோல் நயன் O2, காட்பாதர், கனெக்ட்,லயன், திரில்லர் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். அந்த புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

நயன்-விக்னேஷ் சிவன் திருமண தேதி:

மேலும், இவர்களுடைய திருமண தேதி குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் திருச்சியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருக்கின்றார்கள். இவர்களை காண அங்கு கோவிலுக்கு கூட்டம் அலைமோதி இருந்தது. இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அனைவரும் எதிர்பார்த்தபடி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஆனால், பலரும் எதிர்பார்த்தது போல திருப்பதியில் தான் இவர்கள் முதலில் திருமணம் நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள்.

திருணம் குறித்த தகவல்:

ஆனால், 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு திருப்பதி நிர்வாகத்தில் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லாமல் திருமணம் நடத்த வேண்டாம் என்று இருவருமே இணைந்து முடிவெடுத்து இருக்கின்றன. ஆகவே சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி இருக்கிறது.

Advertisement