‘ஒரு அழகான தருணத்தைப் பார்த்தபோது அதைப் படம்பிடிக்கும் வாய்ப்பைத் தவறவிடவில்லை’ – மகனை கொஞ்சி விளையாடும் நயனின் புகைப்படத்தை பதிவிட்ட விக்கி.

0
2366
vignesh
- Advertisement -

உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் , ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தனது மகன்களுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை பதிவிட்ட விக்னேஷ் சிவன் ‘என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே. இந்த ஓராண்டு எண்ணெற்ற நினைவுகள், ஏற்ற தாழ்வுகள், எதிர்பாரதா பின்னடைவுகள், சோதனையான நாட்கள் என்று நிறைந்து இருக்கிறது. ஆனால், வீட்டிற்கு திரும்பி எனது அன்பான குடும்பத்தை பார்க்கும் போது என்னுடைய கனவுகளை நோக்கி ஓட எனக்கு ஒரு சக்தியை கொடுக்கிறது.

குடும்பம் கொடுக்கும் உறுதி அனைத்தையும் மாற்றும். உங்களுக்கு இரு நல்ல வாழ்க்கயை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவ ‘ நெகடிவ் கமன்ட் செய்பவர்கள் மன்னியுங்கள், ஒரு வேலை நீங்கள் Positivityயை புறக்கணிக்க முயற்சிக்க வேண்டும் என்று உருக்கமுடன் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது மகனை கையில் ஏந்தி கொஞ்சி விளையாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு அழகான தருணத்தைப் பார்த்தபோது அதைப் படம்பிடிக்கும் வாய்ப்பைத் தவறவிடவில்லை.என் உயிர்ஸ். நிறைய அன்பு. எளிமையான தருணம்’ பதிவிவிட்டுள்ளார்.

Advertisement