தனம் உயிருக்கு போராடும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்த புதிய ப்ரோமோ தற்போது இணையத்தில் வேலை ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டையிட்டு ஸ்டோர்ஸ் மாமனாரின் வீட்டிற்கு சென்று விடுகிறார். பிறகு ஐஸ்வர்யா, கண்ணனும் மூர்த்தியிடம் சண்டை பிறகு விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள். முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:
பின் தனத்திற்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இதனால் இவர் மருத்துவமனைக்கு செல்ல நினைக்கிறார். அப்போது தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிகிறது. இதனால் தனம்-மீனா இருவரும் மனம் உடைந்து விடுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டாம் என்று தனம் மீனாவை தடுக்கிறார். பின் ஒரு நாள் கண்ணன் லஞ்சம் வாங்கியது வீட்டிற்கு தெரிய வந்தவுடன் ஐஸ்வர்யாவிற்கு இடுப்பு வலி வந்து விட்டது.
இப்படி ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. கண்ணனை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். பின் எப்படியோ போராடி ஜாமினில் கண்ணன் வெளியே வருகிறார். ஆனால், வீட்டில் மூர்த்தியும் தனமும் கண்ணனிடம் பேசாமல் இருக்கிறார்கள். தான் செய்த தவறை உணர்ந்து கண்ணன் வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் மீனா, தனத்திற்கு இருக்கும் பிரச்சனை முல்லைக்கு தெரிய வருகிறது. இதனால் முல்லையும் மீனாவும் சேர்ந்து தனத்திற்கு ஆபரேஷன் செய்ய திட்டம் போடுகிறார்கள்.
உயிருக்கு போராடும் தனம்:
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்த ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தனத்திற்கு பிரசவ வலி வந்தது போல் முல்லை மீனா இருவரும் டிராமா போடுகிறார்கள். பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தவுடன் எப்படியாவது ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க திட்டம் போடுகிறார்கள். அதற்கேற்ற ஜீவாவிடமும் கதிரிடமும் மீனா, முல்லை குழந்தையை பிரசவத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
சீரியல் குறித்த ப்ரோமோ:
ஆனால், மூர்த்தி சிசேரியன் செய்ய வேண்டாம் என்று அடம் பிடிக்கிறார். பின் முல்லை- மீனா இருவரும் ஏதேதோ பேசி மூர்த்தியை சம்மதிக்க வைக்க பார்க்கிறார்கள். இனி தனத்திற்கு நல்லபடியாக குழந்தை பிறக்குமா? தனத்திற்கு இருக்கும் பிரச்சினை வீட்டிற்கு தெரிய வருமா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.