சினிமாவை விட்டு சமந்தா விலக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற நோயால் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
சமந்தா நடித்த படம்:
இதனை அடுத்து சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
சாகுந்தலம் படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி. ஆனால், எதிர்பார்த்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் படு தோல்வி அடைந்தது சமந்தாவிற்கு மன வருத்தத்தை அளித்திருக்கிறது. இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் நடிப்பில் உருவாகி வரும் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் சமந்தா சினிமாவை விட்டு விலக இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமந்தாவின் நோய் தாக்கம்:
அதாவது, கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதனால் இவர் தீவிரமாக சிகிச்சையும் எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் சமந்தா அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டு படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
சினிமாவை விட்டு விலகும் சமந்தா:
அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருக்கிறார். மேலும், இந்த ஒரு வருடமும் இவர் தனக்கு பிடித்த மற்றும் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும், உடம்பை தேற்றுவதற்கு சிகிச்சை எடுக்க போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கமிட் ஆகி இருந்த படங்களின் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் சமந்தா புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியை குறைத்து டாம் பாய் லுக்கில் மாறி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
சக்தி அம்மாவை சந்தித்து ஆசி
முன்னதாக வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவிலில் சமந்தா சாமி தரிசனம் செய்தார் சமந்தா. தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.