என்னது நயன்தாரா ஜவான் படத்துல நடிச்சாங்களா? சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் விருது பெற்ற நயன். கேலி செய்யும் ரசிகர்கள்.

0
499
- Advertisement -

2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள்விழாவில் நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் அனிமல் பட இயக்குனருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் வழங்கப்பபட்டு இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.

-விளம்பரம்-

இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் பேசும் படமான ராஜா அரிச்சந்திராவை இயக்கியவருமான தாதா சாகேப் பால்கேவின் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

- Advertisement -

தாங்கள் சார்ந்துள்ள திரைத் துறையினுடைய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதமாக இந்த விருது கொடுக்கப்பட்டுவருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை சிவாஜி, ரஜினி, கமல், பாரதிராஜா, ஜானகி, இளையராஜா என்று பலருக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. அதே போல தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

இதில் சினிமா துறையில் சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த பாடகர்கள் போன்ற பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று ( பிப்ரவரி 20) கோலாகலாமக நடந்தது. இந்த விழாவில் ஷாருக்கான், நயன்தாரா, அனிருத் போன்ற பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருதும், அதே படத்தில் நடித்த நயன்தாராவிற்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் நயன்தாராவிற்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டு இருப்பது தான் பெரும் கேலிக்கு உள்ளாகி வருகிறது. ஜாவான் படத்தின் நடிகை நயன்தாரா எதோ கேமியோ ரோலில் வந்து சென்றது போல தான் இருந்தார்.

இதை விட நயன்தாரா படங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால், இந்த படத்தில் அவரது ரோல் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது. இப்படி இருக்க இந்த படத்திற்கு நயன்தாரா சிறந்த நடிகை விருது பெற்று இருப்பது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இதெக்கெல்லாம் தாண்டி ஊரே கழுவி ஊற்றிய அனிமல் படத்தின் இயக்குனருக்கு சிறந்த இயக்குனர் என்ற விருது கிடைத்து இருப்பது தான் கொடுமை என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement