மீண்டும் இணைந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா.! ரஜினி படத்தின் பெயரில் வெளியான பர்ஸ்ட் லுக்.!

0
2740
vignesh-shivan
- Advertisement -

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். மேலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பார்கள். நயன்தாரா, இளையதளபதி விஜயின் “பிகில்” படத்தில் நடித்தும் , அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்திலும் நடித்து உள்ளார். தமிழ்மொழியில் மட்டும் இல்லாமல் இவர் மலையாளத்தில் நிவின் பாலி உடன் நடிக்கும் லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் சாயிரா நரசிம ரெடி படத்திலும் நடித்து வருகிறார்.இப்படி தமிழ் மொழியில் மட்டும் எல்லாம் பிற மொழியில் கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா அவர்கள் தற்போது புதிதாக ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி கொண்டு வருகிறது. மேலும் ‘அவள்’ பேய் படத்தின் இயக்குனர் மிலந்த் ராவ் அவர்கள் நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளார் என்றும் கூறியுள்ளார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க: பாராட்டு மழையாக அள்ளி வீசி வரும் கமல்.! இன்றைய மூன்றாவது ப்ரோமோ இதோ.!

இதைத்தொடர்ந்து நயன்தாராவின் இந்த புது படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளார்.மேலும் இந்த படத்தின் மூலம் இருவரும் இணைய போறாங்க என்ற செய்தி இணையங்களில் வெளியாகி உள்ளது, இந்த தகவல் மூலம் ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பையும் அன்பையும் பெற்றுள்ளார்.மேலும் இந்த படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தி நடித்த நெற்றிக்கண் படத்தின் டைட்டிலை வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை குறித்து டிடி தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-

மேலும் இவர் நடிக்க உள்ள புது படத்தில் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இயக்கப்போவதாக இயக்குனர் கூறியுள்ளார்.இவரை பற்றி கூற வேண்டுமானால் இவர் 7 ஆண்டுகளாக இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதன் பின்னர் இவர் காதல் டூ கல்யாணம் என்ற படத்தை இயக்கினார். ஆனால் 2010ல் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் இன்று நாள் வரை திரை உலகிற்கு வெளிவரவே இல்லை. என்ன? காரணம் என்று தெரியவில்லை.ஆனால் அதன் பிறகு அவர் சித்தார்த்,ஆண்ட்ரியா அவர்கள் நடிப்பில் வெளியாகிய அவள் என்ற பேய் படத்தை இயக்கினார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது.இதனை தொடர்ந்து நயன்தாராவை வைத்து ஒரு திரில்லர் படம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் .அதுமட்டுமில்லாமல் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கப் போவதாக தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது .இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தின் முதலிலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement