அப்போது என்னுடைய பாட்டை டிவியில் கூட பார்க்க மாட்டேன் – சினிமாவில் பிரேக் எடுத்த காரணம் குறித்து நயன்தாரா.

0
1441
nayanthara

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். மேலும்,நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். மேலும்,ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள். இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர்.

nayanthara

பின்னர் தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர், தமிழ் மொழியில் மெஹா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

- Advertisement -

நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு குடும்பபாங்கான தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். மேலும், இடையில் இவர் 2011 ஆம் ஆண்டு ஒரு 11 மாதங்கள் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்டார். இதுகுறித்து நயன் கூறியுள்ளதாவது, நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வாழந்து கொண்டு இருந்தேன். என்னுடைய படத்தையோ பாட்டையோ கூட டிவியில் கூட நான் அப்போது பார்க்கவில்லை.

nayanthara

நான் தனிமையை விரும்பும் ஆள். கூட்டம் என்றால் எனக்கு ஆகாது. நான் பல முறை தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறேன், தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன்.ஒரு கட்டத்தில் அதையெல்லாம் என்னால் கையாள முடியவில்லை. என் படம் தான் பேச வேண்டும் என்று நினைத்தேன். நான் லீட் ரோலில் நடிக்கும் படங்களில் அனைத்தையும் நான் தான் முடிவு செய்வேன். ஒரு சில நேரம் இயக்குநர்கள் கணவன் அல்லதுபாய் பிரண்டுகளை பிளாட்களை கொண்டு வருவார்கள். இது தேவையா என்று நான் கேட்கிறேன், என்று கூறியுள்ளார் நயன்தாரா.

-விளம்பரம்-

Advertisement