இப்போ புரியுதா இது என்னனு – வெந்த புண்ணில் வேலை பாச்சிய வனிதா.

0
1656
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் வனிதாவுக்கு பின்னர் மிகவும் சர்ச்சையான போட்டியாளராக திகழ்ந்தவர் மீரா மிதுன் தான். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் சிக்கினார். அதிலும் குறிப்பாக சேரன் மீது அபாண்டமான குற்றச்சாட்டாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதித்து. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெட்ட பெயரோடு வெளியேறினார். மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னரும் போட்டியாளர்கள் குறித்து அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பேசி வந்தார்.

-விளம்பரம்-

எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு குட்டி கரணத்தை போட்ட அம்மணி கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாகப் பேசி அதன் மூலம் பிரபலத்தை தேடிக் கொண்டு வருகிறார். இதனால் இவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்இப்படி ஒரு நிலையில் சைபர் புல்லிங் குறித்தும், மீரா மிதுன் சர்ச்சைக்கு மறைமுகமாகவும் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார் வனிதா.

- Advertisement -

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் சமூக வலைதளத்தில் Negativity என்றால்என்ன அதை எப்படி ஒருவர் தவறாக பயன்படுத்த முடியும் என்று. பேச்சி சுதந்திரம் என்பது யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வேண்டுமானாலும் மூக்கை நுழைத்து எப்படி வேண்டுமானாலும் தவறான கருத்துக்களை கூறலாம் என்பது கிடையாது. சைபர் புல்லிங் என்பது மிகப்பெரும் குற்றம் தான். அதை செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் வனிதா.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா, பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயத்தில் பலரும் வனிதாவை திட்டித் தீர்த்து வந்தனர். இதனால் கடுப்பான வனிதா, அடிக்கடி சைபர் புல்லிங் குறித்து பேசிகொண்டே தான் இருந்தார். அவ்வளவு ஏன் தன்னை சைபர் புல்லிங் செய்த சூர்யா தேவி மீது புகார் கொடுத்து கைது செய்யவும் செய்தார். தற்போது விஜய், சூர்யா விஷயத்தில் மீரா மிதுன் செய்து வரும் சைபர் புல்லிங் குறித்து மறைமுகமாக இந்த டீவீட்டை செய்துள்ளார் வனிதா.

-விளம்பரம்-

Advertisement