நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கும் காட்ஸ்லி பரிசு குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மலையாளத்தில் ஒரு லோக்கல் சேனலில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நயன் இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுவும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன் கலக்கி கொண்டிருக்கிறார்.
இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான். இது 1100 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.
நயன்தாரா குடும்பம்:
பின் இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி இருக்கிறார்கள். இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும், தங்கள் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா தன்னுடைய 39 வது பிறந்த நாளை தன்னுடைய கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அப்போது அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் ஒரு காட்ஸ்லி கிப்டை கொடுத்திருக்கிறார். அது, mercedes maybach எனப்படும் சொகுசு கார் தான். பென்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த சொகுசு கார்களில் இதுவும் ஒன்று.
விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு:
இந்த கார் ரகம் பாலிவுட் பிரபலங்களின் ஃபேவரட் காராக இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தான் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை ரன்பீர் கபூர், டாப்சி, ரகுல் ப்ரீத் சிங், ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர், அஜய் தேவ்கன் என பல பிரபலங்கள் வாங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த கார் நடிகை நயன்தாராவின் கனவு என்றே சொல்லலாம். இதைத் தெரிந்து கொண்டு தான் விக்னேஷ் சிவன் அவருடைய பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்து ஷாக் கொடுத்திருக்கிறார். மேலும், இந்த mercedes maybach காரில் நிறைய சிறப்பம்சங்கள் இருக்கிறது.
காரின் சிறப்பு அம்சங்கள்:
இந்த கார் கிட்டத்தட்ட ஒரு மினி ஏரோபிளைன் போன்றது. அந்த அளவுக்கு இந்த காரில் ஆடம்பர வசதிகள் நிறைய இருக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலையே ரூ.2.69 கோடி. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.3.4 கோடி. இந்த கார் 3982 சிசி வி8 இஞ்சின் உடன் வருகிறது. இது 557 ஹார்ஸ் பவர் திறன் கொண்டது. இந்த கார் நூறு கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 விநாடியில் தொட்டுவிடும் திறன் கொண்டது. இந்த காரின் டாப் ஸ்பீடு 250 கி.மீ என்று கூறப்படுகிறது. மேலும், பர்ஸ்ட் கிளாஸ் பிரைவேட் ஜெட்டில் எந்த அளவுக்கு வசதி இருக்குமோ அதே அளவுக்கு வசதி உடன் கூடிய சீட்டுகள் இந்த காரில் இருக்கிறது.
நயன்தாரா பதிவு:
அதோடு இந்த சீட்டில் மசாஜ் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. இந்த காரில் கதவு திறப்பது முதல் சீட்டை அட்ஜஸ்ட் செய்துகொள்வது வரை என அனைத்துமே டிஜிட்டல் மூலம் செய்துகொள்ள முடியும். இந்த காரில் ஒரு மினி பிரிட்ஜும் இருக்கிறது. இந்த காரில் வயர்லெஸ் சார்ஜிங் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. அதோடு இதில் லேப்டாப் வைத்து வேலை செய்ய டேபிள் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த சொகுசு காரை வாங்கிய முதல் கோலிவுட் நடிகை என்ற பெருமை நயன்தாராவுக்கே சேரும். இந்நிலையில் இந்த காருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.