போன முறையோடு இந்த முறை கொஞ்சம் பங்கம் பண்ணிட்டாங்க – கமலை வச்சி செய்த கோபி சுதாகர்

0
267
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் தெரிவித்தாலும் பின் இந்த நிகழ்ச்சிக்கு பேவரட் நிகழ்ச்சியாக மாறியது. மேலும், தமிழில் ஆறு சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை கமலஹாசன் தான் தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

கடந்த அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. இதுவரை இல்லாத வகையில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீட்டுடன் நிகழ்ச்சியை பரபரப்பாக, சண்டை கலவரங்களுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அனன்யா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த சில வாரமாகவே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டிருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சீசன்களை விட இந்த சீசனில் கமலஹாசன் போட்டியாளர்களிடம் பாரபட்சம் இல்லாமல், மக்கள் மனசாட்சியாக பேசாமல் தன்னுடைய சுயநலத்திற்காக பேசுகிறார் என்றே பல விமர்சனங்கள் இருந்து வருகிறது.

கமல் குறித்த சர்ச்சை:

குறிப்பாக, பிரதிப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் தான் பூகம்பமாக வெடித்திருந்தது. இதற்கு கமலை தாக்கி பேசி இருந்தார்கள். கமலும் இது தொடர்பாக பல விளக்கம் கொடுத்திருந்தாலும் நெட்டிசன்கள் விடவில்லை. அதேபோல் கடந்த வாரம் நிகழ்ச்சியில் நிக்சன், அர்ச்சனாவை சொறிகிடுவேன் என்று மோசமாக பேசியிருந்தார். அதற்கு கமர் அவரை கண்டிப்பது போல் கண்டித்து நிக்ஸனுக்கு ஆதரவாக பேசி அர்ச்சனாவை திட்டியிருந்தார். பின் தினேஷ் தௌலத் என்று சொன்னது, மணி பிறரை மெட்ராஸ் பாஷையில் கிண்டல் அடிக்கும் வகையில் பேசியதிற்கு கமல் பெரிதாக விமர்சித்து பேசி இருந்தார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

இப்படி தொடர்ந்து கமலஹாசன் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். இதனால் நீங்கள் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டாமல் ஒருதலைபட்சமாக கூறுகிறீர்கள். நீங்கள் அரசியலுக்கு வந்தால் எப்படி குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தருவீர்கள்? என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அதோடு இந்த முறை கமலை பயங்கரமாக பங்கம் செய்து வருகிறார்கள்.

பரிதாபங்கள் சுதாகர்- கோபி கிண்டல்:

குறிப்பாக, பரிதாபங்கள் சுதாகர்- கோபி இருவருமே கமலை பயங்கரமாக கலாய்த்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்கள் எல்லாம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதுமே கமலை விமர்சித்து வரும் மீம்ஸ்கள் தான் வைரலாகி இருக்கிறது, இதனால் கமல் இந்த சீசனோடு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement