ஹாஸ்பிட்டல்ல கூட இவ்ளோ மேக்கப்பா – கேலி செய்த மாளவிகாவிற்கு நயன்தாரா குடுத்த செம பதிலடி.

0
428
- Advertisement -

தன்னை மறைமுகமாக கேலி செய்த மாளவிகா மோகனுக்கு நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அதேபோல இவர் லீடு ரோலில் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இதனால் வருடத்திற்கு ஒரு படமாவது லீடு ரோலில் நடித்து விடுகிறார். நடிகையாக மட்டுமல்லாமல் நயந்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இந்த தயாரிப்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும், லீட் ரோலில் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தனது சொந்த தயாரிப்பில் தான் வெளியிடுகிறார் நயன். அதனாலேயே தன் சொந்த தயாரிப்பில் வெளியாகும் தன்னுடைய படங்களுக்கு முட்டும் Promtionல் கட்டாயம் ஈடுபட்டு விடுவார். இந்த நிலையில் நயன்தாரா தற்போது கனக்ட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அவரே லீட் ரோலில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், வினய் போன்றவர்கள் முக்கிய ரோலில் நடித்து இருக்கின்றனர்.

இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் தன் மீதான பல விமர்சனங்கள் குறித்து பதில் அளித்தார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜா ராணி படத்தில் தான் நடித்த ஹாஸ்பிடால் காட்சியை மறைமுகமாக கேலி செய்த மாளவிகா மோகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனிடம் ” ‘தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன், ஒரு மருத்துவமனை காட்சியில், அவர் கிட்டத்தட்ட இறந்து கொண்டிருக்கிறார், ஆனால், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார். அதை பார்த்த போது எப்படி ஒருவர் இறக்கும் நிலையில் லிப்ஸ்டிக்கோடு இருப்பார் என்று தான் தோன்றியது.

அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும், நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றாலும், அது கொஞ்சம் யதார்த்தமாக இருக்க வேண்டும் இது கொஞ்சம் லாஜிக்கை மீறி இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள நயன்தாரா ‘ ஹாஸ்பிடல் சீன என்பதால் அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement