விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு வழங்கிய கைக் கடிகாரத்தின் விலை தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தான் நயன்தாரா இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் பரவி வருகிறது. சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2, கோல்ட், காட்ஃபாதர். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான் இது தற்போது 1000 கோடிக்கு மேல் வசூலாகி வருகிறது. .
நயன்தாரா திரைப்பயணம்:
இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்தும் சில படங்களில் நயன் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்:
விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடி தான் திரைப்படத்தை இயக்கினார். அப்போதே விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிப்பதாக கிசு கிசுகள் வந்தது. அதன் பின் இவர்கள் இருவரும் அதைனை உறுதி செய்தனர். அதன் பின் அனைவரும் எதிர்பார்த்த வகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபல்லிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக நடந்தது.
விக்னேஷ் சிவன் அளித்த பரிசு:
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் அளித்த வாட்ச் பற்றி பேசி இருந்தார். அந்த வாட்சின் விலை தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.அந்த வாட்ச் ஆனது ரோலக்ஸ் கம்பெனியை சார்ந்ததாகவும் 31 mm டைலரைக் கொண்டதாகவும் உள்ளது. அந்த வாட்சில் டைமண்ட் கற்கள் பொதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச் வெளியானது தற்போது 23 லட்சம் முதல் 26 லட்சம் வரை உள்ளது. இது குறித்து நயன்தாரா கூறுகையில் இது என்னுடைய பிறந்தநாள் என்று அவர் பரிசாக அளித்தார் என்று கூறியிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் இந்த காசுக்கு ஒரு வீடு கட்டி விடலாம் போல என்றும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.