‘என் பையன் 20 தோசை சாப்பிடுவான்’ – பாசமாக வளர்த்த மகனை ரயில் விபத்தில் பறிகொடுத்துள்ள நீயா நானாவில் பங்கேற்ற வைரல் தாய்

0
211
Dosai
- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் பிரணவ் அநியாயமாக எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது “நீயா நானா” நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

-விளம்பரம்-

ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா”. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிராக இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி:

இப்படி கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் தரப்பிலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மாதம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் அம்மா – மகன் இருவருமே கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அம்மா, என்னுடைய மகன் 25 தோசைக்கு மேல் சாப்பிடுவான். நான் சுட்டுக்கொடுக்க அவன் சாப்பிட்டு கொண்டு இருப்பான்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞன்:

ஒரு கட்டத்தில் மாவு காலி எழுந்து போடா என்று சொல்லி விடுவேன் என்று வேடிக்கையாக பேசி இருந்தார். அந்த எபிசோடில் இவர்கள் பேசியது நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞன் பிரணவ் என்பவர் அநியாயமாக ரயிலில் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. சென்னையை எடுத்த தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். இவருக்கு 21 வயது ஆகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் தான் சதீஷ். இவருக்கு 40 வயதாகிறது. இவர்கள் இருவருமே சென்னையில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

ரயில் மோதி இறந்த சம்பவம்:

சில தினங்களுக்கு முன்பு இரவு வழக்கம் போல இவர்கள் வேலை முடித்துவிட்டு மின்சார ரயிலில் குரோம்பேட்டை நிலையம் வந்தனர். பின் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்று இருந்தார்கள். அப்போது கொல்கத்தாவில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இருவருமே தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சேலத்தில் நடந்த சம்பவம்:

அது மட்டும் இல்லாமல் இதே போல் சேலம் மாவட்டம் கெஜல் நாயக்கன்பட்டி ராஜாராம் காலனி சேர்ந்தவர் சந்திரசேகர். அதே மாவட்ட சூரமங்கலம் சுந்தம் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்கள் இருவருமே பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டுச்சாலையில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார்கள். இவர்களுமே சில தினங்களுக்கு முன்பு பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்து மூணாவது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸில் இருவர் மீதும் மோதி இருக்கிறது. சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்து விட்டார்கள். இது குறித்து போலீசார் தகவல் அறிந்து விசாரித்து வருகிறார்கள்.

Advertisement