நெஞ்சிருக்கும் வரை பட நடிகையை ஞாபகம் இருக்கா ? 35 வயதில் இப்படி ஒரு படு கிளாமர் உடையில். லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

0
526
poonam kaur
- Advertisement -

தமிழில் கடந்த 2007ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நரேன் நடிப்பில் வெளியான ‘நெஞ்சிருக்கும்வரை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவர் திரைப்படத்திற்கு வரும் முன்பாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளது. தனது 20 வயதில் 2006ஆம் ஆண்டு மாயாஜாலம் என்ற படத்தில் நடித்து சினிமாத்துறையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இவருக்கு ஷாம் என்ற காதலர் இருக்கிறார். தற்போது 35 வயதானா பூனம் கவுருக்கும் ஷாமுக்கும் திருமணம் ஆகிவிட்டது என செய்திகள் வந்தது.

இதையும் பாருங்க : இது நடந்து இருக்க கூடாது – புனீத் ராஜ்குமாரின் கல்லறையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

ஆனால் இதுவரை ஷாமை பொது வெளியில் காட்டியதில்லை பூனம். இவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் மிகப்பெரிய ரசிகை ஆவார். எனவே, இவருக்கும் நடிகை பூனம் கவுருக்கும் தொடர்பு இருப்பதாக தெலுங்கின் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் பெரும் சர்ச்சையை கூட கிளப்பி இருந்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய நடிகை பூனம் கவுர், பவன்கல்யாண் மீது எனக்கு ஆசை இருந்தது உண்மைதான்.

ஆனால் இவை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய்யான விஷயம். எனக்கு பவன் கல்யானை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். அவரது மகளுக்கு உடம்பு சரியில்லை என்றதும் நான் அவருக்காக விரதம் கூட இருந்தேன். எங்கள் உறவு மிகவும் புனிதமானது என்று கூறி இருந்தார். அதே போல முன்பை போல இவரை படங்களில் அதிகம் காண முடிவதில்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 4-8.jpg

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் படு கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது ஆடையை ஒரே ஒரு வளையம் தான் பிடித்திக்கொண்டு இருப்பது போல இருக்கிறது.

Advertisement