5 நாட்களில் Ngk படம் எத்தனை கோடி வசூல் வசூல் செய்துள்ளது தெரியுமா.!

0
766
- Advertisement -

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Ngk’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. வருட காத்திருப்பிற்கு வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தினை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலும் பொதுவான ரசிகர்களை இந்த படம் கவரவில்லை. மேலும், இந்த படம் சரியாக புரியவில்லை என்று சொன்ன ரசிகர்களுக்கும் இயக்குனர் செல்வராகவன் ட்வீட் மூலம் பதிலளித்திருந்தார்.

- Advertisement -

அதில், என்.ஜி.கே. படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளன. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த டீவீட்டை அடுத்து இந்த படத்தினை ரசிகர்கள் மீண்டும் பார்த்துவிட்டு படத்தில் உள்ள ரகசிய காட்சிகளை கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இருப்பினும் அது வசூலுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழ்நாட்டில் படம் ஓரளவிற்கு ஜெயித்தாலும் மற்ற மாநிலங்களில் படத்திற்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் சூர்யாவின் அடுத்த பட வியாபாரத்திற்கு பிரச்சனை என்று எல்லாம் தெரிவிக்கின்றனர்.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் NGK 5 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ,

சென்னை

 1. 1.05 கோடி
 2. 1.08 கோடி
 3. 1.09 கோடி
 4. 0.36 கோடி
 5. 0.34 கோடி

மொத்தம் ரூ. 3.92 கோடி

தமிழ்நாடு

 1. ரூ. 14.28 கோடி
 2. ரூ. 14.75 கோடி
 3. ரூ. 15.12 கோடி
 4. ரூ. 4.03 கோடி
 5. ரூ. 3.86 கோடி

  என்று மொத்தம் 52.04 கோடி வசூலித்துள்ளது
Advertisement